நெல்லை மாநராட்சியில் 55 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில், 51 பேர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள். மாநகராட்சி மேயர் சரவணனுக்கும், பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. மேயர் சரவணன் தன்னிசையாகச் செயல்படுவதாகவும், தங்கள் வார்டுகளில் நடக்கவேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடாமல், கோப்புகளைத் தனது மேஜையிலேயே வைத்துக்கொள்வதாகவும் புகார் எழுந்தது. மாநகராட்சி ஒப்பந்தங்களில் 25 சதவிகிதம் வரை கமிஷன் கேட்பதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், `அதில் உண்மையில்லை, அனைத்தும் தவறான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்’ என மறுத்துவந்தார் சரவணன். நெல்லை மாநகராட்சி
மாநகராட்சி ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்குவது தொடர்பாக மேயர் சரவணன், பாளையங்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அப்போதைய மத்திய மாவட்டச் செயலாளராகவும் இருந்த அப்துல் வஹாப்புடன் மோதல் ஏற்பட்டதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய கட்சித் தலைமை அப்துல் வஹாப்பின் ’மா.செ’ பதவியைப் பறித்தது. அதன் பின்னரும் மாநகராட்சியில் அமைதி நிலவவில்லை. தொடர்ந்து மேயருக்கு எதிராகப் புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. கவுன்சிலர்கள் பலரும் மாமன்றக் கூட்டங்களில் நேரடியாகவே கேள்விகளை எழுப்புவதால், பல நேரங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் ஒத்திவைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், 40-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கட்சித் தலைமைக்குப் புகார் மனு அனுப்பினர். இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றித் தருவதில்லை என ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். மாமன்றக் கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது. இதனால், மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. நெல்லை மாநகராட்சி
கடந்த நவம்பர் 21-ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். முகாமில் மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை உட்பட அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மேயர் முன்னுரிமை கொடுப்பதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். “நெல்லை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளைச் செயல்படுத்துவதில்லை. மேயர் சரவணன் பாரபட்சமாக நடக்கிறார்” எனக் கூறி ஏற்கெனவே உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்தனர். தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க கவுன்சிலர்கள்
இது தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் மேயர் சரவணன் மற்றும் தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனி மாமன்றக் கூட்டத்தை முறையாக நடத்த உத்தரவிட்டனர். ஆனால், அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மேயர், கவுன்சிலர்களிடையே மோதல் போக்கு தொடர்கிறது. இந்த நிலையில், மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் கடிதத்தை தி.மு.க-வின் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையாளர் சுபம் ஞானதேவ் ராவிடம் ஒப்படைத்தனர். மாநகராட்சியின் கவுன்சில் செயல்பாடுகளுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குத் தடை விதித்தால் மட்டுமே, ஆணையர் உத்தரவுப்படி அடிப்படைப் பணிகள் நடக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SzqTH4
Thursday, 7 December 2023
Home »
» நெல்லை: "மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!" - திமுக கவுன்சிலர்கள் மனு