மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 163 தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் கம்லேஷ்வர் தோடியார் மட்டும் புதிய கட்சியான பாரத் ஆதிவாசி கட்சி சார்பாக வெற்றிபெற்றிருக்கிறார். இந்தக் கட்சி, கடந்த செப்டம்பர் மாதம்தான் ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த கம்லேஷ்வர் இதற்கு முன்பும் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
பலரிடம் கடன் வாங்கித்தான் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு சைலானா தொகுதியிலிருந்து போபாலுக்குச் செல்ல கம்லேஷ்வரிடம் சொந்தமாக கார் இல்லை. இதனால் எப்படி போபால் செல்வது என்று தெரியாமல் பலரிடம் கார் கேட்டுப் பார்த்தார். ஆனால், யாரும் கார் கொடுக்க முன்வரவில்லை.
இதையடுத்து தன்னுடைய மைத்துனரிடம் இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கி, அதில் முன்பக்கம் `எம்.எல்.ஏ’ என்று எழுதிக்கொண்டு தன்னுடைய நண்பருடன் போபாலுக்குப் புறப்பட்டார். கூடவே நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டார். இரு சக்கர வாகனத்தில் போபாலுக்குச் செல்வதை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 330 கிலோமீட்டர் பயணம் செய்து போபாலைச் சென்றடைந்தார்.
சட்டமன்றக் கட்டடத்துக்குச் சென்றதும் அவர் தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. நேற்றுத்தான் அதிகாரிகளைச் சந்தித்து தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழைக் கொடுத்து முறைப்படி எம்.எல்.ஏ-வானார். இரு சக்கர வாகனத்தில் கம்லேஷ்வர்
கம்லேஷ்வர் தனது படிப்புக்குத் தேவையான பணத்தைக் கூலி வேலை செய்தும், சாப்பாடு டெலிவரி செய்தும் திரட்டினார். இது குறித்து கமலேஷ்வர் கூறுகையில்,'' தேர்தலில் என்னுடைய நண்பர்கள் சாப்பிடாமல், வெறும் வயிற்றுடன் எனக்காக பிரசாரம் செய்தனர். சிலர் சொந்தப் பணத்தையும் எனக்காகச் செலவு செய்தனர். இப்போது போபாலுக்குச் செல்ல என்னிடம் கார் இல்லை. எனவே, இரு சக்கர வாகனத்தில் செல்கிறேன்'' என்றார்.
கம்லேஷ்வர் இப்போது மண் வீட்டில்தான் வசிக்கிறார். சட்டம் படித்திருக்கும் கம்லேஷ்வர் இதற்கு முன்பு 2018 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Szsyfs
Friday, 8 December 2023
Home »
» `காரில் போக வசதியில்லை’ - இரு சக்கர வாகனத்தில் 330 கி.மீ பயணித்து சட்டசபைக்குச் சென்ற எம்.எல்.ஏ!