ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவு ரத்து மசோதா 2019, செல்லும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வு நேற்று நடந்தது.Article 370 - உச்ச நீதிமன்றம்
இதில் பேசிய பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர், "காஷ்மீர் மக்களுக்கு இந்திய நாட்டின் தார்மீக, அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய, சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் உந்துதலால் நிகழ்ந்திருக்கிறது.
காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு. காஷ்மீர் இல்லாமல் 'பாகிஸ்தான்' என்ற வார்த்தை முழுமையடையாது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்கள் தனித்துவமான உறவால் பிணைக்கப்பட்டுள்ளனர். அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, முழு பாகிஸ்தான் தலைமையும் காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக ஒன்றுபட்டிருக்கிறது.பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர்
பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம் ஜம்மு காஷ்மீர். ஆனால், காஷ்மீர் விவகாரம் உள்விவகாரம் என்று இந்தியா மீண்டும் மீண்டும் கூறுகிறது. மேலும் தீவிரவாதம் வன்முறை, விரோதம் இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான, நட்புறவை விரும்புவதாகவும் கூறுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒருதலைபட்சமான நடவடிக்கைகளைச் சரிபார்ப்பதற்குப் பதிலாக அரசியல் உந்துதல், உள்நோக்கம் கொண்டதாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
Article 370: ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம்தான்; ஆனால், மனம் தளரவில்லை!" - உமர் அப்துல்லா
http://dlvr.it/T09rPY
Friday 15 December 2023
Home »
» Article 370: "உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது!" - பாகிஸ்தான் பிரதமர்