மணிப்பூரில் கடந்த ஆண்டில் இருந்து கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களான குக்கி இன மக்களும், மெய்தி இன மக்களும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இக்கலவரத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். ஆனாலும் இன்னும் கலவரம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கலவரம் முடிவுக்கு வந்தது போன்று இருக்கும். ஆனால் திடீரென மீண்டும் கலவரம் ஏற்படும்.
இதனிடையே சுரசந்த்பூர் மாவட்டத்தில் ஷியாம்லால் பால் என்ற போலீஸ்காரர் குக்கி இனத்தை சேர்ந்த சிலருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஷியாம்லால் செல்ஃபி எடுத்துக்கொண்ட நபர்கள் கையில் ஆயுதம் வைத்திருந்தனர். அவர்கள் கிராம பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது.
மலை உச்சியில் நின்று இந்த செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த செல்ஃபி புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. உடனே ஷியாம்லால் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கோரி நேற்று மாலையில் சுரசந்த்பூரில் கலவரம் ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டு ஷியாம்லாலை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கோரினர். அவர்கள் அங்கு நின்ற பஸ் ஒன்றுக்கு தீவைத்தனர்.
எஸ்.பி.அலுவலகத்திற்கு வெளியில் இருந்த அனைத்தையும் தீவைத்து கொளுத்தினர். அலுவலகத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசித்தாக்கினர். இதனால் கலவரக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 25 பேர் காயம் அடைந்தனர். மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது.
இக்கலவரத்திற்கு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தான் காரணம் என்று குக்கி இன மக்கள் தெரிவித்துள்ளனர். சுரசந்த்பூர் மாவட்டத்தில் குக்கி இன மக்கள் அதிகமாக இருக்கின்றனர். அடிக்கடி தங்களது பகுதிக்குள் புகுந்து போலீஸார் தாக்குவதாக குக்கி இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இக்குற்றச்சாட்டை போலீஸார் மறுத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2q7fp
Friday 16 February 2024
Home »
» மணிப்பூர்: கலவரத்துக்கு காரணமான செல்ஃபி; காவலர் சஸ்பெண்ட், தீவைப்பு - வெடித்த வன்முறையில் 2 பேர் பலி