நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலில் தி.மு.க விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று (பிப்ரவரி 12-ம் தேதி) நடத்தியுள்ளது. வி.சி.க கேட்ட தொகுதிகள் எத்தனை... அதற்கு தி.மு.க-வின் பதிலென்ன... உள்ளிட்ட உள் விவகாரங்கள் குறித்து விசாரித்தோம்.டி.ஆர் பாலு தலைமையிலான குழு
காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சிபிஐ ஆகிய கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முதற்கட்டமாக முடித்திருக்கும் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார், எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, சிந்தனை செல்வன் மற்றும் பனையூர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். தி.மு.க தரப்பில் தொகுதி பங்கீட்டு குழுத் தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் எம்.பி ஆ.ராசா, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நம்மிடம் பேசிய உள்விவரமறிந்தவர்கள், ``கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 2 எம்.பி தொகுதிகளை தி.மு.க-விடம் பெற்றுக் கொண்டது விடுதலை சிறுத்தைகள். இரண்டு இடங்களிலும் வெற்றியும் பெற்றனர். இந்தமுறை 4 தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் விருப்பம். அதில் 1 பொதுத் தொகுதியும் 3 தனித் தொகுதிகளாகவும் ஒதுக்க கோரியுள்ளது. இதுதொடர்பான ஒரு பட்டியலையும் வி.சி.க வழங்கியுள்ளது. அதன்படி தனித் தொகுதிகளான விழுப்புரம், சிதம்பரம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் மூன்று தொகுதிகளும், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் பெரம்பலூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் ஒரு தொகுதியும் கேட்டக்கப்பட்டிருக்கிறது” என்றனர். திருமாவளவன், ஸ்டாலின்
தொடர்ந்து நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், ``நாங்கள் 4 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். அதில் 3 தொகுதிகளை நிச்சயமாக தி.மு.க ஒதுக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அதேபோல் நாங்கள் போட்டியிடும் 3, 4 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடவது தான் எங்கள் திட்டம். சுமார் 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து வலுவாக இருக்கிறது வி.சி.க” என்றனர்.
தி.மு.க தரப்பில் பேசியபோது, ``ஏற்கனவே போட்டியிட்ட இரு தொகுதிகளை தர தி.மு.க தயாராகவுள்ளது. வி.சி.க மேலும் ஒருசில தொகுதிகளை கேட்பதால் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று, ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றனர்.ஸ்டாலின், டி.ஆர்.பாலு
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ``2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரே அளவிலான தொகுதிகளை ஒதுக்கியிருந்தது தி.மு.க. இச்சுழுலில் வி.சி.க மட்டும் 4 தொகுதிகள் கொடுத்து மற்றவர்களுக்கு 1, 2 என கொடுத்தால் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே வி.சி.க-வுக்கு 4 தொகுதிகளை தர வாய்ப்பு இல்லை. 2 தொகுதிகள் தர தயாராக இருக்கும் தி.மு.க 3 ஆக உயர்த்தி தரும் வாய்ப்புகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போதைக்கு விழுப்புரம், சிதம்பரம் மட்டுமே உறுதி என்கிறார்கள். வரும்நாள்களில் என்ன நடக்கிறதென பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY3 தொகுதிகள்... தனிச்சின்னம்... மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் விடுதலைச் சிறுத்தைகள்?!
http://dlvr.it/T2g8yX
Tuesday 13 February 2024
Home »
» `3 தனித்தொகுதி + 1 பொதுத் தொகுதி..!' - திருமாவளவனின் கோரிக்கைக்கு திமுக-வின் ரியாக்ஷன் என்ன?!