பா.ஜ.க-வை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள், இந்தியா கூட்டணியாக அடுத்தடுத்து வேலைகளில் ஈடுபட்டு வந்தாலும், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள்கூட இல்லாத சூழலிலும், சீட் பகிர்வு முடிவாகாமல் கூட்டணிக்குள் பெரும் தலைவலியாக இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இன்னும் சீட் பகிர்வு முடிவுசெய்யப்படவில்லை என்றாலும், அந்தக் கூட்டணி பா.ஜ.க-வின் ஒற்றைத் தலைமையின் கீழ் இருக்கிறது. இந்தியா கூட்டணி அப்படியில்லை.இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணியிலிருக்கும் பெரும்பாலான கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இதனாலேயே, காங்கிரஸுக்கு சீட் ஒதுக்குவது பிரச்னையாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் `நாங்கள் தனியாகவே போட்டியிடுகிறோம், காங்கிரஸுக்கு ஒரு சீட்கூட இல்லை' என மம்தா தொடங்கிவைக்க, பஞ்சாப்பில் `நாங்கள் தனித்து களமிறங்குகிறோம், காங்கிரஸிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை' என ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கூறினார். ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப்பில் தங்கள் கட்சி தனித்துப் போட்டி என்பதை உறுதி செய்தார்.
ஆனால், டெல்லியில் தனித்தா அல்லது காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இன்னொருபக்கம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய லோக் தள கட்சித் தலைவர் ஜெயந்த் சிங் ஆகியோர் கூட்டணியிலிருந்தே விலகினர். இத்தகைய சூழலில், டெல்லியிலும் காங்கிரஸுடன் சீட் பகிர்வு இல்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பஞ்சாப் நிகழ்ச்சியொன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோவை ஆம் ஆத்மி தனது அதிகாரபூர்வ X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.அரவிந்த் கெஜ்ரிவால்
அந்த வீடியோவில், ``டெல்லி மக்கள் 7 இடங்களையும் ஆம் ஆத்மிக்கு வழங்க முடிவுசெய்துவிட்டனர். அதேபோல, பஞ்சாப்பிலுள்ள 13 லோக் சபா தொகுதிகளில் 13-ம் ஆம் ஆத்மிக்கு அளித்து பகவந்த் மானின் கரங்களைப் பலப்படுத்துங்கள். பின்னர், மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் பஞ்சாப்பின் பணத்தையோ, எந்த வேலையையும் தடுக்கும் துணிச்சல் வராது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.மகாராஷ்டிரா: ஷிண்டே, அஜித் பவாரை தொடர்ந்து அணி மாற தயாராகும் காங்கிரஸ் MLA-கள்?! - என்ன நடக்கிறது?
http://dlvr.it/T2cx78
Monday 12 February 2024
Home »
» பஞ்சாப்பைத் தொடர்ந்து டெல்லியிலும் தனித்து களமிறங்குகிறதா ஆம் ஆத்மி? - கெஜ்ரிவால் கூறியதென்ன?