நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில், இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றிப் பெற வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் பா.ஜ.க தலைமையில் ஆளும் NDA கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் INDIA கூட்டணியும் களமாடி வருகின்றன.பா.ஜ.க - காங்கிரஸ்
இந்த நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம், இந்தியா முழுவதும் மூட் ஆஃப் தி நேஷன் ( Mood of the Nation) என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024 வரை, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், 35,801 பேரை பங்கேற்பாளராகக் கொண்டு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை மக்களவை இடங்கள், எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளையும் தற்போது இந்தியா டுடே அறிவித்திருக்கிறது.
அதன் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்:-
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும், தி.மு.க அங்கம் வகிக்கும் INDIA கூட்டணி வெற்றி பெறலாம்.
வாக்கு சதவிகிதம்!
INDIA கூட்டணி - 47 சதவிகிதம்
NDA கூட்டணி - 15 சதவிகிதம்
மற்றவை - 38 சதவிகித வாக்குகளைப் பெறக்கூடும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் மம்தா பானர்ஜி தலைமையிலனா திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பா.ஜ.க 19 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெறும் என முடிவு வெளியாகியிருக்கிறது.
வாக்கு சதவிகிதம்!
திரிணாமுல் காங்கிரஸ் - 53 சதவிகிதம்
பா.ஜ.க - 40 சதவிகிதம்
மற்றவை - 7 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது.
கேரளா:
கேரளாவில் இருக்கும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், INDIA கூட்டணி வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
வாக்கு சதவிகிதம்!
INDIA கூட்டணி - 78 சதவிகிதம்
NDA கூட்டணி - 17 சதவிகிதம்
மற்றவை - 5 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம்:
ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.
வாக்கு சதவிகிதம்!
தெலுங்கு தேசம் கட்சி - 45 சதவிகிதம்
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி - 41 சதவிகிதம்
INDIA கூட்டணி - 3 சதவிகிதம்
NDA கூட்டணி - 2 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகா:
கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 24 இடங்களிலும், INDIA கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.
வாக்கு சதவிகிதம்!
NDA கூட்டணி - 53 சதவிகிதம்
INDIA கூட்டணி - 42 சதவிகிதம்
மற்றவை - 5 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
தெலங்கானா:
தெலங்கானாவில் இருக்கும் 17 மக்களைவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 10 இடங்களிலும், NDA கூட்டணி 3 இடங்களிலும், முன்னாள் முதல்வர் கே.சி.ஆர்-ன் பி.ஆர்.எஸ் 3 இடங்களையும், அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 1 இடத்தையும் கைப்பற்றலாம்.
வாக்கு சதவிகிதம்!
காங்கிரஸ் - 41.2 சதவிகிதம்
பி.ஆர்.எஸ் - 29.1 சதவிகிதம்
பா.ஜ.க - 21.1 சதவிகிதம்
மற்றவை - 9.6 சதவிகித வாக்குகளைப் பெறும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் 80 இடங்களில், NDA கூட்டணி 72 தொகுதிகளில் வெற்றி பெறலாம். INDIA கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
வாக்கு சதவிகிதம்!
NDA கூட்டணி - 52 சதவிகிதம்
INDIA கூட்டணி - 36 சதவிகிதம்
மற்றவை - 12 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது.
டெல்லி:
டெல்லியில் இருக்கும் 7 மக்களவைத் தொகுதிகளையும் NDA கூட்டணி கைப்பற்றக்கூடும்.
வாக்கு சதவிகிதம்!
NDA கூட்டணி - 57 சதவிகிதம்
INDIA கூட்டணி - 40 சதவிகிதம்
மற்றவை - 3 சதவிகித வாக்குகளைப் பெறும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
பீகார்:
பீகார் மாநிலத்தில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளில், NDA கூட்டணி 32 இடங்களையும், INDIA கூட்டணி 8 இடங்களையும் கைப்பற்றலாம். (இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024-க்கு இடையில் நடத்தப்பட்டது. எனவே, கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை)
வாக்கு சதவிகிதம்!
NDA கூட்டணி - 52 சதவிகிதம்
INDIA கூட்டணி - 38 சதவிகிதம்
மற்றவை - 10 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் இருக்கும் 48 தொகுதிகளில் INDIA கூட்டணி 26 தொகுதிகளிலும், (காங்கிரஸ் - 12, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா + சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14) NDA கூட்டணி 22 தொகுதிகளையும் கைப்பற்றும்.
வாக்கு சதவிகிதம்!
INDIA கூட்டணி - 45 சதவிகிதம்
NDA கூட்டணி - 40 சதவிகிதம்
மற்றவை - 15 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.இந்தியா டுடே - மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின்படி, பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைத் தாண்டி 335 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. அதேபோல காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 166 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.Nitish Kumar கூட்டணி மாறியதும், INDIA கூட்டணிக்காக Kharge செய்த முதல் வேலை! | The Imperfect Show
http://dlvr.it/T2V3WZ
Friday 9 February 2024
Home »
» India Today Survey: தமிழ்நாட்டில் திமுக முந்துகிறதா? | தெலங்கானா, கர்நாடகாவில் என்ன நிலவரம்?