நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல் ஆண்டு என்பதால் கடந்த பிப்ரவரி மாதமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.வருமான வரி முறை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி முடிவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார். பட்ஜெட்டுக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், அதற்கான பணிகளில் நிதியமைச்சக அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.அங்கக வேளாண் மையம், மக்காச்சோள ஆராய்ச்சி மையம்... மறைந்த சி.ராமசாமி ஆற்றிய வேளாண் பணிகள்..!
http://dlvr.it/T9GbYk
Sunday 7 July 2024
Home »
» ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்..!