தமிழ்நாட்டின் ஒரேயொரு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ளது. மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் இங்கு உள் நோயாளியாக தங்கி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதச் சென்றுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை பொறுப்பு ஆர்.எம்.ஓ சுப்ரஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். பின்னர் சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த அன்று ஆர்.எம்.ஓ விடுமுறையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பிரச்னை பெரிதாக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பொறுப்பு ஆர்.எம்.ஓ சுப்ரஜா-வின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அவர் பணியில் இணைந்தார். இந்த நிலையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளரான கிஷோர் என்பவர் மீது சில புகார்கள் சென்றதை அடுத்து, அவர் தூத்துக்குடி சித்த மருத்துவ அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையரின் இடமாற்ற உத்தரவை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து கோட்டாறு ஆயுர்வேத மருத்துவமனையிலேயே பணிபுரிந்துவருவதாக கூறப்படுகிறது.கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், "இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலக கண்காணிப்பாளர் மீது இதற்கு முன்பும் சில மோசமான குற்றச்சாட்டுகள் எழுந்து, நடவடிக்கைகளுக்கு ஆளாகி உள்ளார். சில புகாரின் அடிப்படையில் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர், சிலரை பிடித்து கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனைக்கு பணிக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் சில பிரச்னைகளுக்கு அவரும் காரணமாக இருந்ததால், விசாரணையின் அடிப்படையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையரால் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், அந்த ஆணையை மதிக்காமல் தொடர்ந்து கோட்டாரில் பணி செய்கிறார். அதற்கு என்ன காரணம், அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை" என்றனர்.ஆயுர்வேத மருத்துவ கல்லூரி
இது குறித்து அலுவலக கண்காணிப்பாளர் கிஷோர் கூறுகையில், "நான் இங்கு வந்து 2 ஆண்டுகள்தான் ஆகிறது. இங்கு பனிப்போர் நடக்கிறது. ஏற்கெனவே ஆர்.எம்.ஓ ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையின் பழிவாங்கும் விதமாக என்னை பணியிட மாற்றம் செய்துள்ளனர். நிர்வாக காரணம் என பணியிட மாற்றத்தில் கூறியுள்ளனர். பணியிட மாற்றம் செய்த ஆணையர் ஓய்வுபெற்றுவிட்டார். இனி புதிய ஆணையர் பதவியேற்ற பின்னர் எந்தமாதிரியான முடிவு எடுக்கிறார் என்பதற்காக கோட்டாரிலேயே பணியை தொடர்கிறேன். என்மீது ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை கோர்ட்டில் ஸ்டேயில் கிடக்கிறது. அதற்கும் இந்த பணியிட மாற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.ஆம்ஸ்ட்ராங் கொலை: `அரசியல் பின்புலம் இருக்கிறது; இது திராவிட மாடலா... கொலை மாடலா?' - தமிழிசை காட்டம்
http://dlvr.it/T9Gqxs
Sunday 7 July 2024
Home »
» இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலக கண்காணிப்பாளர்; சர்ச்சையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி!