சபரிமலை: சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் எட்டு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அலைமோதிய கூட்டம் :
சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. அதன் பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நேற்று யாரும் எதிர் பார்க்காத அளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்களாகதான் தென் பட்டனர். பம்பை, மரக்கூட்டம், சரங்குத்தி என பல இடங்களிலும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். நேற்று ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 18-ம் படியில் ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர்.
கூட்ட நெரிசல்:
இவர்கள் ஐயப்பனை தரிசிக்க வடக்கு வாசல் வழியாக மீண்டும் செல்ல வேண்டும். இதற்காக இவர்கள் மாளிகைப்புறத்தம்மன் கோயில் அருகே நீண்ட கியூவில் நின்றனர். மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி வந்து தீபாராதனை முடிந்ததும் இவர்களை தரிசனத்துக்காக திறந்து விட்டனர். அப்போது பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்தி செல்ல முயன்ற போது நெரிசல் ஏற்பட்டது. இதில் மாளிகைப்புறத்தம்மன் கோயில் அருகே கூட்டம் கட்டுப்பாடு இழந்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில் 31 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
அனுமதி :
இவர்களை தேசிய பேரிடர் நிவாரணப்படையினர், மத்திய அதிவிரைவு படையினர், ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் ஸ்டிரெச்சரில் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் இரண்டு பேர் உடனடியாக கோட்டயம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் பம்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எட்டு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கவலைக்கிடம்:
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா, தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மோகன் காயமடைந்துள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த குருஅம்மாள் 61 , நாகரய்யா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் குருஅம்மாள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
English summary:
Sabarimala: Sabarimala stampede 31 people were injured. Eight of them is in critical condition.