பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஷூ லேசை கட்டி விட்டவர் அவரது உறவினர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு:
சமூக வலைதளங்களில் கர்நாடக முதல்வர் சி்த்தராமையாவிற்கு, நபர் ஒருவர் ஷூ லேசை கட்டிவிடுவது போன்ற காட்சிகள் மற்றும் வீடியோ வேகமாக பரவ துவங்கின. இந்த புகைப்படம் மைசூருவில் எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் மற்றொரு காலிலும் உள்ள ஷூ லேசை கட்ட சி்த்தராமையா பணிப்பது போன்ற படங்களும் இடம்பெற்றிருந்தன. சித்தராமையாவின் உதவியாளர் அல்லது அரசு அலுவலர் எனவும் ஒரு வதந்தி பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக முதல்வரின் மீடியா ஆலோசகர் முதல்வரின் ஷூ லேசை கட்டியது உதவியாளரோ, அரசு அலுவலரோ அல்ல. அவரது உறவினர் என தெரிவித்துள்ளார்.
English Summary:
Bangalore: Karnataka Chief Minister Siddaramaiah, who tied his cousin's shoe Leica that clarification.