சென்னை - அ.தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தி.மு.க செயல்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது:
அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலா எடுத்த சபதம் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள். குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்போம். அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். வறட்சி குறித்து புள்ளி விவரங்களை சேகரித்த பின் பிரதமரை சந்தித்து உரிய நிதி பெறுவோம். நீட் தேர்வு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்'' என்றார்.





