கேரள மாநிலம், காசர்கோடு செறுவத்தூரைச் சேர்ந்தவர் சஹானா (20). இவர் நகைக்கடை விளம்பரங்களில் மாடலாக இருந்துவந்தார். இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜ்ஜாத் என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதையடுத்து சினிமாவில் நடித்தும் வந்துள்ளார். சஹானாவும் சஜ்ஜாத்தும் கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு பறம்பில் பஜார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சஹானா இறந்திருக்கிறார். வீட்டு அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் கூறியுள்ளார். ஆனால், சஜ்ஜத் ஏற்கெனவே மகளைக் கொடுமைப்படுத்திவந்ததாக சஹானாவின் தாய் உமைபா கூறியிருக்கிறார்.இறந்த நடிகை சஹானா
சஹானா வசித்துவந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "இரவு நேரத்தில் சஹானா பேசவில்லை என அவரின் கணவர் சஜ்ஜாத் சத்தம் போட்டார். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது சஜ்ஜாத் தனது மடியில் சஹானாவின் உடலைக் கிடத்தியிருந்தார். அவர் ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தார். இது பற்றி வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சஜ்ஜாத்தையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்" என்றனர்.
இது பற்றி சஹானாவின் தாய் உமைபா கூறுகையில், "பிறந்தநாள் விருந்தில் கலந்துகொள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என மகள் கூறியிருந்தாள். கணவன் சஜ்ஜாத் அடிக்கடி கொடுமைப்படுத்துவது பற்றி மகள் போனில் சொல்லியிருந்தாள். உன் மகளைக் கொன்றுதான் அங்கு அனுப்புவேன் என்று ஒருமுறை சொல்லியிருந்தார். தனது மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த செக் -கைக் கேட்டு கொடுமைப்படுத்தினார்" என்றார்.சஹானா
இது பற்றி போலீஸார் கூறுகையில், "சஹானா மரணத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் கணவர் சஜ்ஜாத்திடம் விசாரணை நடத்திவருகிறோம். சினிமாவில் நடிக்கச் சென்றதால் கிடைத்த சம்பள செக்-கை எந்த வங்கியில் போடுவது என்பதில் கணவன் அடிக்கடி தகராறு செய்துள்ளதாகச்சொல்கிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.
http://dlvr.it/SQLkwk
Saturday 14 May 2022
Home »
» செக்கை எந்த வங்கிக் கணக்கில் போடுவது என்பதில் வந்த பிரச்னை?!- கேரள நடிகை மரணத்தில் நீடிக்கும் மர்மம்