சமீபத்தில் பாஜக மூத்த எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், 2,500 கோடிக்கு ஈடாக மாநில முதல்வர் பதவியை வழங்குவதாகக் கூறி சிலர் தன்னை அணுகியதாக தெரிவித்தார். இதையடுத்து, சில நாள்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு வந்துள்ளது.
கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு இது தொடர்பாக, ``பசவராஜ் பொம்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. அவர் பணம் கொடுத்து முதல்வரானவர். அவர் பணத்துக்காக முதல்வராக நியமிக்கப்பட்டவர். அதனால்தான் அவர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் ஏன் மக்களுக்காக வேலை செய்யப்போகிறார். ஆர்எஸ்எஸ்-ன் அறிவுரைகளை பின்பற்றினால் போதும் என்பதற்காகத்தான், ஆர்எஸ்எஸ் பசவராஜ் பொம்மையை முதலமைச்சராக்கியுள்ளது.பொம்மை - மோடி
இந்த அரசாங்கத்தால் நான்கு வருடங்களில் ஒரு வீடுகூட வழங்க முடியவில்லை. இவ்வாறான அரசாங்கம் தொடர வேண்டுமா... பாஜக அரசு வெட்கப்பட வேண்டும். ஐந்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த நான் 15 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது’’ என்றார். ``தேசிய மொழியாக இந்தி ஒருபோதும் இல்லை, இருக்கவும் முடியாது" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
http://dlvr.it/SQ1Vjz
Monday 9 May 2022
Home »
» `பசவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல... பணம் கொடுத்து முதல்வரானவர்' - சித்தராமையா காட்டம்