ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டமிழந்து வெளியேறினார்.
நடப்பு ஐபிஎல் சீசன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன விராட் கோலிக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. வேறு எந்த சீசனிலும் இப்படியொரு மோசமான ஃபார்மில் விராட் கோலி இருந்ததில்லை. ரன் மிஷின் என்று பெயர் எடுத்தவர் 15 ரன்கள் எடுக்கவே மிகவும் சிரமப்படுவதும் மிகவும் பரிதாபகரமான ஒன்று. முதல் போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டாவது போட்டியில் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த அவர், மூன்றாவது போட்டியில் 6 பந்துகளில் வெறும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். நான்காவது போட்டியில் 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்த அவர், ஐந்தாவது போட்டியில் 1 (3), ஆறாவது போட்டியில் 12(14) ரன்கள் எடுத்து சொதப்பியதோடு அடுத்த இரண்டு போட்டியில் கோல்டன் டக் ஆனார்.
ஒன்பதாவது போட்டியில் 10 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றிய விராட் கோலி அடுத்த போட்டியில் மிகவும் நிதானமாக விளையாடி 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்த அரை சதத்தின் மூலம் விராட் கோலி மீண்டு வந்துவிட்டதாக ரசிகர்கள் சற்றே கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இன்றைய போட்டியிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். நடப்பு ஐபிஎல் சீசனின் விராட் கோலியின் மூன்றாவது கோல்டன் டக் ஆகும். ஹைதராபாத் அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக கோல்டன் டக் ஆகியுள்ளார். 8 முறை 13 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளார். இதனால், விராட் கோலியின் பார்ம் பெங்களூரு ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
41*(29)12(7)5(6)48(36)1(3)12(14)0(1)0(1)9(10)58(53)30(33)0(1)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தற்போது நடைபெற்று வரும் முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் யாடி வருகின்றன. இரவு 7.30 மணியளவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோது கின்றன. ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார்.
அதன்படி, பெங்களூர் அணியில் விராட் கோலி, டூப்ளசிஸ் இருவரும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே அதாவது ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்த போதும் கேப்டன் டூப் பிளசிஸ் மற்றும் பட்டிதார் இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். 17 ஓவர்கள் முடிவில் அந்த அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது. பட்டிதார் 38 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டூப் பிளசிஸ் 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை வண்ண ஜெர்சியில் களமிறங்கியுள்ளனர். பசுமை திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், பெங்களூரு அணி நிர்வாகம் பச்சை வண்ண ஜெர்சியை அணி வீரர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஏதேனும் ஒரு போட்டியின்போது பெங்களூரு அணி வீரர்கள் ஒருநாள் பச்சை வண்ண ஜெர்சி அணிந்து விளையாடினர்.
விராட் கோலி மூன்றாவது முறை கோல்டன் டக் ஆகியுள்ளதை நெட்டிசன்கள் கே.ஜி.எஃப் டயலக் உடன் இணைத்து கலாய்த்து வருகிறார்கள். அதாவது, கே.ஜி.எஃப்ல் வயலன்ஸ், வயலன்ஸ் என வருவதை கோல்டன் டக், கோல்டன் டக் என மாற்றி பதிவிட்டு வருகிறார்கள்.
http://dlvr.it/SPzHR8
Sunday 8 May 2022
Home »
» ஒரே சீசனில் மூன்றாவது கோல்டன் ‘டக்’ - கிங் கோலிக்கு என்னதான் ஆச்சு? தொடரும் மோசமான ஃபார்ம்