ட்விட்டரை விட்டு வெளியேறுவதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என சிஇஓ பராக் அகர்வாலால் பதவி நீக்கம் செய்யப்பட்ட கேவோன் பெய்க்பூர் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதளமான டிவிட்டரை கையகப்படுத்த உள்ள நிலையில், டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இரண்டு முக்கிய நிர்வாகிகளான தயாரிப்பு தலைவரான கேவோன் பெய்க்பூர் மற்றும் வருவாய் பொது மேலாளர் புரூஸ் ஃபலாக் ஆகியோரை பணிநீக்கம் செய்துள்ளார்.
ட்விட்டரின் தயாரிப்புத் தலைவராக பணியாற்றிய கேவோன் பெய்க்பூர் “7 ஆண்டுகளுக்குப் பிறகு டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன்.உண்மை என்னவென்றால் எப்போது டிவிட்டரை விட்டு வெளியேறுவது என்று நான் கற்பனை செய்ததில்லை, இது என்னுடைய முடிவு அல்ல. பராக் டிவிட்டரை வேறு திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார் என்பதை எனக்குத் தெரியப்படுத்தினார். அதன்பிறகு என்னை வெளியேறும்படி கேட்டுக் கொண்டார்.
While I’m disappointed, I take solace in a few things: I am INSANELY proud of what our collective team achieved over the last few years, and my own contribution to this journey.
— Kayvon Beykpour (@kayvz) May 12, 2022
நான் ஏமாற்றமடைந்தாலும், சில விஷயங்களில் ஆறுதல் அடைகிறேன்: கடந்த சில ஆண்டுகளாக எங்கள் கூட்டுக் குழு என்ன சாதித்திருக்கிறது என்பதையும், இந்தப் பயணத்தில் என்னுடைய சொந்த பங்களிப்பையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார். குழந்தை பிறந்ததால் விடுமுறையில் இருக்கும் கேவோனுக்கு பணிநீக்க அறிவிப்பு சென்று சேர்ந்திருக்கிறது. வருவாய் பொது மேலாளராக பணியாறிய புரூஸ் ஃபலாக் அகற்றப்பட்டதை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார், ஆனால் பின்னர் அந்த ட்வீட்டை நீக்கினார். இருப்பினும் வேலையற்றவர் (Unemployed) என தன் டிவிட்டர் பயோவில் மாற்றம் செய்துகொண்டார். இதையடுத்து Jay Sullivan டிவிட்டரின் தயாரிப்புத் தலைவராகவும், இடைக்கால வருவாய்த் தலைவராகவும் பொறுப்பேற்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
http://dlvr.it/SQK5z5
Friday 13 May 2022
Home »
» ட்விட்டரை விட்டு வெளியேறுவதை நினைத்துப் பார்க்கவில்லை - டிஸ்மிஸ் ஆன உயரதிகாரி குமுறல்