மத்திய பிரதேசத்தின், ததியா மாவட்டத்தில் ரத யாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அந்த திருவிழாவின்போது 6 வயது சிறுவன் ஒருவன் காவலரிடம் வந்து உணவு வாங்க வேண்டும். ஆனால் தற்போது என்னிடம் பணம் இல்லை எனக்கூறி பணம் கேட்டுள்ளான்.
அந்த தலைமை காவலர் ரவி சர்மா பணம் தர மறுப்பு தெரிவித்து, அந்த சிறுவனை விரட்டியுள்ளார். அந்த சிறுவன் பசி மயக்கத்தில், மறுபடியும் அதே காவலரிடம் வந்து பணம் கேட்டுள்ளான். அப்போது கோபத்தின் உச்சநிலைக்கு சென்ற அந்த தலைமை காவலர், அந்த சிறுவனை அடித்து, கழுத்து நெரித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் உயிரிழந்து விட்டான். என்ன செய்வதென்று திகைத்து நின்ற அந்த தலைமை காவலர், உயிரிழந்த சிறுவனின் உடலை யாரும் இல்லாத இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
A head constable of MP Police arrested for allegedly killing a six-year-old boy in Datia dist after the latter repeatedly asked him for money to buy food
The accused cop was suffering from depression & got irritated&strangled the kid to death: Datia SP Aman Singh Rathore (11.05) pic.twitter.com/mLkHJf3bbz— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 12, 2022
எனினும் அவர் சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக தலைமை காவலர் ரவி சர்மா கூறும் போது, ``நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். அந்த சிறுவன் தொடர்ந்து பணம் கேட்டதால் எரிச்சலடைந்துவிட்டேன்'' என கூறியுள்ளார். இதையொட்டி, ததியா மாவட்ட எஸ்.பி அமன் சிங் ரத்தோர், ரவியை உடனடியாக பணியில் இருந்து நீக்கும்படி காவலர் தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின்: மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கண்டிப்பு; ஆத்திரத்தில் தாய் உட்பட மூவரைக் கொலை செய்த சிறுவன்
http://dlvr.it/SQDHYc
Thursday 12 May 2022
Home »
» உணவுக்காக பணம் கேட்ட 6 வயது சிறுவனைக் கொன்ற காவலர்! - ம.பி-யில் அதிர்ச்சி