ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனையோ பேர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டு தற்கொலை வரை சென்றுள்ளனர். மும்பையில் ஒருவர் தான் பணியாற்றிய அலுவலகத்தில் பணத்தை திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பை போரிவலியில் செயல்படும் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வந்தவர் கபில் ராமன்லால். இக்கம்பெனியை சேதன் ஷா என்பவர் தனது சகோதரர் பரேஷ் ஷா என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.
பரேஷ் ஷாவின் மகன் தீபக் ஷாவும் கம்பெனி செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். தீபக் கம்பெனியின் வங்கி கணக்கு விபரங்களை ஆய்வு செய்த போது ஒரு முறை 30 லட்சமும், மற்றொரு முறை 60 லட்சமும் கபில் வங்கி கணக்கில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தீபக் தனது தந்தை மற்றும் சித்தப்பாவிடம் தெரிவித்தார். உடனே வங்கியின் கணக்கை முழுமையாக சோதனை செய்தபோது கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கபில் பணத்தை திருடி இருப்பது தெரிய வந்தது.
உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு இது குறித்து கபிலிடம் கேட்டதற்கு, அனைத்து பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக தெரிவித்தார். அதோடு உடனே தலைமறைவாகிவிட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கபில் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது வெறும் 16 ஆயிரம் மட்டுமே இருந்தது. அதே சமயம் கபில் தான் வேலை செய்த கம்பெனியிலிருந்து 15.37 கோடியை திருடியிருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்து பணத்தையும் சூதாட்டத்தில் இழந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. திருடிய பணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
http://dlvr.it/SXyljQ
Thursday 8 September 2022
Home »
» அலுவலத்தில் ரூ.15 கோடி திருட்டு; அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நபரை தேடும் போலீஸார்