காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில தலைவர்களை நேரடியாக நியமிக்க அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில், பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக தீர்மானங்கள் நிறைவேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் பாரத் ஜூடோ பயணத்தை ராகுல் காந்தி பத்து நாட்களை கடந்து கலந்துகொண்டு வருகிறார்.
http://dlvr.it/SYXP0x
Sunday 18 September 2022
Home »
» ’காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான்- ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம்