குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீப காலமாக குறைந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நேர்மையாளர்களையும், ஒழுக்கமானவர்களையும் மட்டுமே சட்டம் - ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தங்களை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், மனுதாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாலும், அவர்களை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று 4 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், சமூகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளது.
http://dlvr.it/SYQtPj
Friday 16 September 2022
Home »
» `நேர்மையாளர்களையும் ஒழுக்கமானவர்களையும் நியமிக்கவும்’- டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு