`சீரியல் கில்லர்' என்ற வார்த்தையை சினிமாக்களில் அடிக்கடி கேட்டிருப்போம். சினிமாவில் இப்படி சீரியல் கொலைகள் நடப்பதால் நிஜத்திலும் இப்படி நடக்கிறதா? இல்லை நிஜத்தில் நடப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறதா என்பது வாக்குவாதத்துக்குரிய தனியொரு தலைப்புதான். மேலும் இதில் ஈடுபடுபவர்கள், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதால்தான் இதுபோன்ற கொலைகளைச் செய்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும், கொலை என்பது குற்றம்தான்.கொலை
அந்த வரிசையில், மத்தியப் பிரதேசத்தில் நிஜத்தில் தொடர்ச்சியாக 4 பாதுகாப்பு காவலர்களைக் கொலைசெய்த சிவபிரசாத் துர்வே என்ற நபரைக் கடந்த செப்டம்பர் 2-ம் தேதியன்று போலீஸ் கைதுசெய்திருக்கிறது. மேலும் இந்த 4 கொலைகளில், முதல் மூன்று கொலைகளை 72 மணிநேரங்களில் செய்த சிவபிரசாத், போலீஸ் தன்னை கைதுசெய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் போபாலில் நான்காவது கொலையையும் செய்திருக்கிறார். மேலும் கைதுசெய்யப்பட்ட சிவபிரசாத், சாகர் மத்திய சிறையில் அடைக்கப்பதிலிருந்து, அங்குள்ள சிறைக்கைதிகள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.சீரியல் கில்லர் கைது
இந்த நிலையில் கொலையாளி சிவபிரசாத் பற்றி ஊடகத்திடம் பேசிய சிறை கண்காணிப்பாளர் பாங்க்ரே, ``குற்றம் செய்ததற்கான அவரின் உள்ளுணர்வைப் பார்த்ததால், சீரியல் கில்லரை மற்ற கைதிகளுடன் வைக்கவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப்பட்திருக்கிறார். அவர்மீது நான்கு சீரியல் கொலைகள் உட்பட ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.சிறை
அதுமட்டுமல்லாமல், கிடைக்கக்கூடிய எந்தவொரு பொருளையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் திறனுடையவராகக் கருதப்படுவதால், அவருடன் எந்தப் பாத்திரங்களையும் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், செப்டம்பர் 6-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, அவரின் நடத்தை சாதாரணமாகத்தான் இருக்கிறது. மேலும் அவரை சீர்திருத்துவதற்காக அவருக்கு மத மற்றும் கல்வி புத்தகங்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம். அதோடு, அவரின் குடும்பத்திலிருந்து யாரும் அவரை சிறையில் சந்திக்கவில்லை" எனத் தெரிவித்தார்.கே.ஜி.எஃப் இன்ஸ்பிரேஷன்; செக்யூரிட்டிகள் டார்கெட்; சீரியல் கில்லர் `ஸ்டோன் மேன்’ சிக்கியது எப்படி?
http://dlvr.it/SYP1T2
Thursday 15 September 2022
Home »
» 72 மணிநேரத்தில் 3 கொலைகள்; சீரியல் கில்லரால் அச்சத்தில் ஜெயில் கைதிகள்!