ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை மத்திய பாஜக அரசு எதிர்கொண்டது. இந்த நிலையில், நேற்று வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ``உள்துறை அமைச்சர் கொண்டு வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகச் சிலர் என்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர்
நான் ரத்து செய்வதற்கு எதிராக வாக்களித்துள்ளேன், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாத இவர்கள், நான் 370வது சட்டப்பிரிவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறார்கள். பிரிவு 370-ஐ மீட்டெடுக்க மக்களவையில் சுமார் 350 வாக்குகளும், மாநிலங்களவையில் 175 வாக்குகளும் தேவைப்படும். இது எந்த அரசியல் கட்சியாலும் எட்டமுடியாத எண்ணிக்கை. ஆனால் காங்கிரஸ் 50 இடங்களுக்குள் சுருங்கி விட்டது, சட்டப்பிரிவு 370 ஐ மீட்டெடுப்பதாக அவர்கள் பேசினால், அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.குலாம் நபி ஆசாத்
எனக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில் நம்பிக்கை இல்லாததால், எனது புதிய அரசியல் செயல்திட்டத்தில் 370-வது பிரிவை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கவில்லை. மாறாக, மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது ஆகியவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்துவேன். ஏனெனில் இவை நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளாகும். என்னுடன் நின்று எனது புதிய கட்சியின் அடித்தளமாக இருக்கும் எனது சகாக்களுக்கு நன்றி கூறுகிறேன், கடவுள் விரும்பினால், அடுத்த 10 நாட்களுக்குள் எனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.``மோடி மனிதாபிமானமுள்ளவர்..!" - குலாம் நபி ஆசாத்
http://dlvr.it/SY949M
Monday 12 September 2022
Home »
» ``370-வது பிரிவை மீட்டெடுப்பேன் என பொய்யான வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை" - குலாம் நபி ஆசாத்