2024-ம் ஆண்டு லோக் சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், தற்போது பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக வலியுறுத்திவருகிறது. அரசாங்கரீதியாகப் பொதுமக்கள், மத அமைப்புகளிடம் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்க 22-வது சட்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்கிறது.பொது சிவில் சட்டம்
இன்னொரு பக்கம், `பொது சிவில் சட்டத்தின்பேரில் இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என இந்த வார தொடக்கத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். பிரதமரின் இத்தகைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளும் வந்தன.
இந்த நிலையில் மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா, பொது சிவில் சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும், வடகிழக்கில் தனித்துவமான கலாசாரங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பொது சிவில் சட்டம் தொடர்பாகப் பேசிய கான்ராட் கே சங்மா, ``இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு.மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா
அத்தகைய பன்முகத்தன்மையே நம்முடைய பலம், அடையாளம். ஆனால் பொது சிவில் சட்டம், இந்தியாவின் சிந்தனைக்கு எதிரானது. பொது சிவில் சட்டத்தின் உண்மையான உள்ளடக்கத்தைப் பார்க்காமல் அதனுள் செல்வது சரியாக இருக்காது. வடகிழக்கில் பல தனித்துவமான கலாசாரங்கள், சமூகங்கள் இருக்கின்றன. நாங்கள் அவ்வாறே இருக்க விரும்புகிறோம். இங்கு மேகாலயாவில் தாய்வழிச் சமூகம் இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற முடியாது" என்று கூறினார்.'பொது சிவில் சட்டம்' ஸ்டாலின் சீற்றம்... அமித் ஷா வகுத்த வியூகம்! | Elangovan Explains
http://dlvr.it/SrY0WV
Sunday 2 July 2023
Home »
» ``பன்முகத்தன்மையே பலம்; பொது சிவில் சட்டம் இந்தியாவின் சிந்தனைக்கு எதிரானது!" - மேகாலயா முதல்வர்