மத்தியப் பிரதேசத்தின் தாதியா மாவட்டத்தில், 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான விவகாரத்தில், பா.ஜ.க நிர்வாகியின் மைனர் மகன் உட்பட நான்கு பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை அளித்த புகாரின் அடிப்படியில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.பாலியல் வன்கொடுமை
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, 19 வயது பெண் உட்பட அவரின் தங்கை ஆகியோர் நான்கு பேரால் கடத்தப்பட்டதாகவும், இதில் 19 வயது பெண் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து இருவரும் வீடு திரும்பியபோது பாதிக்கப்பட்ட பெண், தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். நல்ல வேளையாக காப்பாற்றப்பட்ட அந்தப் பெண், தற்போது அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் தாதியா தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது.
இதுவொருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை இந்தச் சம்பவம் தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகியின் மைனர் மகன் உட்பட நான்கு பேரைக் குற்றம்சாட்டி உன்னாவ் காவல் நிலையத்தில் அவர்கள்மீது புகாரளித்தார். இந்தப் புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்மீது போக்சோ உட்பட இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 376 D, 354, 342 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடவே, போலீஸார் அவர்களிடம் வழக்கு பதிவின் நகலைக் கொடுத்து சமாதானப்படுத்தி திருப்பியனுப்பினர். கைது
இதுவரை, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒரு இளைஞர், இரண்டு சிறுவர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பா.ஜ.க நிர்வாகியின் மைனர் மகனும் ஒருவர். அதேசமயம், குற்றம்சாட்டப்பட்டவர்களில் தலைமறைவாக இருக்கும் நபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு போலீஸார் தரப்பில் 10,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தாதியா மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேந்திர புத்தோலியா கூறுகையில், ``இதுவொரு துரதிஷ்டவசமான சம்பவம். போலீஸார் இன்னும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யவில்லை. ஒருவேளை, பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் பா.ஜ.க நிர்வாகியின் மகனின் பெயரைக் குறிப்பிட்டால், கட்சி மேலிடம் அந்த பா.ஜ.க நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பும். அதன் பிறகு கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.`பாலியல் வன்கொடுமை, சங்கிலி சித்ரவதை!' - கண்ணீர்மல்க கதறிய சிறுமி... அம்பலமான ஆசிரம `கொடுமைகள்'
http://dlvr.it/SsHfSr
Monday, 17 July 2023
Home »
» ம.பி: அக்கா தங்கைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; பாஜக நிர்வாகியின் மகன் உட்பட 4 பேர்மீது வழக்கு பதிவு!