கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மாற்றுக்கட்சியிலிருந்து அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ``எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது, அவருடைய ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கோவை கிருஷ்ணா கல்லூரி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமலிருக்க, எங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றாலும், சம்பந்தப்பட்ட துறை மேற்பார்வையில் முறையாக கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றனவா என்று ஆய்வுசெய்ய வேண்டும். எஸ்.பி வேலுமணி
கோவை மாவட்ட சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. ஒரு நல்ல காவல் அதிகாரியை இழந்திருக்கிறோம். விஜயகுமார் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியிருக்கிறார். சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.
பா.ஜ.க-வுக்கு அடிமையாக அ.தி.மு.க செயல்படுகிறது என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூறினார்கள். ஆனால், காவிரி மேலாண்மை பிரச்னையில் 23 நாள்கள் அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினோம். பொதுவான பிரச்னையில் மக்கள் பக்கம் நின்று அ.தி.மு.க செயல்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க கூட்டணியில் இருப்பவர்கள் ஆளும் அரசாங்கம் எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்க்காமல் அடிமையாகச் செயல்பட்டு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கின்றனர். எஸ்.பி வேலுமணி
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களைத் தைரியமாக நடத்தினர். ஆனால், தற்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறார்களா என்றுகூட தெரியவில்லை. தி.மு.க-வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்துவது இல்லை. தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மக்கள் சந்திக்கும் எந்த ஒரு பொதுப் பிரச்னைகளையும் எதிர்த்து பேசுவது இல்லை.
தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுகின்றன. அவற்றையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்காமல் தி.மு.க எப்படிச் செல்கிறதோ அவர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் செல்கின்றன. ஆனால், ஆளுங்கட்சி செய்யும் எல்லா தவறுகளைச் சுட்டிக்காட்டி, பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை சட்டமன்றத்தில் குரல் எழுப்பி சிறந்த எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.``ஜெயலலிதாவே வந்தாலும் 'உங்களை நீக்கிவிட்டோம்' என்பார் எடப்பாடி'' - நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி
http://dlvr.it/SrvMDb
Sunday 9 July 2023
Home »
» ``திமுக கூட்டணியில் இருப்பவர்கள் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்'' - எஸ்.பி.வேலுமணி