விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்கள் தொகுதி முழுவதிலும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் தந்திமர தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மகாலட்சுமி திட்டம் மற்றும் இளைஞர் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கான உத்தரவாத அட்டை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் 'கை சின்னம்' அச்சிடப்பட்ட அட்டையில், வாக்காளர்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் நிரப்பிய டோக்கன் விநியோகிக்கப்படுவதாக தகவல் பரவியது.விநியோகம்
இதையறிந்த பா.ஜ.க-வினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பெட்டிக்கடையில் உள்ள நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதையடுத்து, அவரிடம் இருந்த உத்தரவாத அட்டைகளை பறிமுதல் செய்த பா.ஜ.க-வினர், இது குறித்து போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விருதுநகரில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகாயினியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க-வினர், விருதுநகர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 'வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்க வேண்டிய அதிகாரிகளே தங்களது பணியில் மெத்தனமாக செயல்படுகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள்' என குற்றம்சாட்டி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து போட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.டோக்கன்தர்ணாகாங்கிரஸ் ஆதரவாளர்கள்
இதையடுத்து வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது உத்தரவாத அட்டை விநியோகித்தது தொடர்பாக வழக்கு பதிவுசெய்வதாக போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக டோக்கன் விநியோகம் செய்தது குறித்து துணைப்பதிவாளர் அந்தோணிராஜ் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், உத்தரவாத அட்டை விநியோகத்தில் ஈடுபட்ட காமராஜ் என்பவரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பதிவுதர்ணா..
இதேபோல மற்றொரு சம்பவமாக, திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சோளங்குரணியில், மூடப்பட்ட ரேஷன் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தேர்தல் உத்தரவாத அட்டை விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.`பாஜக-வின் நட்சத்திர பேச்சாளராக மாறிவிட்டார் பினராயி விஜயன்!' - காங்கிரஸ் செயல் தலைவர் விளாசல்
http://dlvr.it/T5W9KD
Monday, 15 April 2024
Home »
» 'கைச் சின்னம்' அச்சிடப்பட்ட உத்தரவாத அட்டை விநியோகம்; தர்ணாவில் இறங்கிய ராதிகா -விருதுநகர் பரபரப்பு!