தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.கவுடன் இணைந்து பணியாற்றி பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வு, கியூட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு உடந்தையாக இருந்த அ.தி.மு.க இன்று பா.ஜ.க கூட்டணியில் இருந்து மக்களின் நலனுக்காக வெளியேறியதாகவும், கூட்டணி தர்மத்திற்காகவே அந்த சட்டங்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்படியானால், மக்கள் விரோத சட்டங்களுக்கு உடந்தையாக இருந்ததை அவர்களாகவே தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர். உ.வாசுகி
தங்கள் காரியங்களை எல்லாம் சாதித்துவிட்டு தற்போது பா.ஜ.கவை எதிர்ப்பதைப் போல எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். இந்தத் தேர்தலில் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் வீழ்த்த வேண்டும். தரம் குறைந்த மருந்துகளை தயாரித்தது தொடர்பாக வழக்கு மற்றும் விசாரணையில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரம் கோடி ரூபாயை பா.ஜ.க வாங்கியுள்ளது. தரம் குறைந்த மருந்துகளை பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அதானி, அம்பானி, அண்ணாமலை போன்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். ஏழை மக்கள்தான் இந்த மருந்துகளை பயன்படுத்துவார்கள். அவர்கள் உயிர்களை பற்றி மோடிக்கு அக்கறை கிடையாது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி, ஓய்வில்லாமல் உழைத்து வருவதாகச் சொல்கிறார். அவர் யாருக்காக உழைத்தார் என்பது கேள்விக்குறிதான். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே அவர் உழைத்துள்ளார். நிச்சயமாக நாம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கடந்த பா.ஜ.க ஆட்சியில் ஒன்றிய தணிக்கைக் குழு அளித்துள்ள அறிக்கையில், ஏழரை லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. நாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறிக் கொள்ளும் பா.ஜ.கவினர் இது குறித்து வாய்திறக்காதது ஏன்? ரஃபேல் போர் விமான கொள்முதலில் நடந்த ஊழலில் அனில் அம்பானிக்கு ஆதரவாக மோடி செயல்பட்டார். பல ஆயிரம் கோடி பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு ஆதரவாகச் செயல்பட்டார். தேர்தல் பரப்புரை
பல ஆயிரம் கோடி ஊழல் செய்த ரெட்டியை கட்சியில் சேர்த்துள்ளனர். தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தில் பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்தனர். பலரை விலை கொடுத்து கட்சியில் சேர்த்துள்ளனர். குற்றவாளிகள் எல்லாம் பா.ஜ.கவில் சேர்ந்து சுத்தவாளியாக மாறுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் ஊழல் செய்தனர் என்று கூறி, அவர்களை மட்டும் அமலாக்கத்துறை மூலம் கைது செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற முதலமைச்சர்களை கைது செய்தனர். ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களை தடுத்து நிறுத்திவிட்டு மோடி மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அமலாக்கத்துறையின் செயல்பாடு உள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5K4W8
Wednesday 10 April 2024
Home »
» `ஓய்வில்லாமல் உழைப்பதாக கூறும் மோடிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உ.வாசுகி