தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் தமிழிசை சௌந்தரராஜன். தீவிர பிரசாரத்தில் இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் பிரசாரத்தை முன்னெடுக்கும் விதமாக ஜூம் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதில், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகளில் சிலர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன்
இதனால், அந்த மீட்டிங்கில் கலந்துகொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து அந்த மீட்டிங்க் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன்,``அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதால், ஜூம் (Zoom) மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த மீட்டிங்கில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். மீட்டிங் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது பிரச்னைகளை தெரிவிக்காத வகையிலும், நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியினர் இதை செய்தனர். தமிழிசை சௌந்தரராஜன்
குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க-வை இதற்கு நேரடியாக குற்றம் சுமத்துகிறேன். இது கேவலமான அரசியல். இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது. பெண்கள் இணைய வெளியில் சுதந்திரமாக பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும். அரசியலை தூய்மை படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது அவசியம். இந்த அதிர்ச்சிகர செயலுக்கு நான் வருந்துகிறேன். நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.`அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல்; பாஜக-வின் மறைமுக கூட்டணியால் நடவடிக்கை இல்லை'- பிடிஆர்
http://dlvr.it/T5WTCv
Monday, 15 April 2024
Home »
» `பிரசார ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ' - திமுக-வை குற்றம்சாட்டும் தமிழிசை சௌந்தரராஜன்!