"400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் மோடி, மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று சி.பி.எம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஓபுளா படித்துறை பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சி.பி.எம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசும்போது, "மதமாச்சர்யங்கள் இல்லாத மகத்தான சித்திரைத் திருவிழா நேரத்தில் மதுரை வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வைகை நாகரிகம் நமது தத்துவார்த்த போராட்டத்திற்கு உந்துகோலாக உள்ளது. மதம்தான் நமது கலாசாரம் என பேசுபவர்ளுக்கு நமது நாகரிகம் மதச்சார்பற்ற நாகரிகம் என்பதை கீழடி சொல்லுகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.
1978 முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மையமாக உள்ள மதுரையில் சங்கரய்யா, ஜானகி அம்மாள், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட மகத்தான தலைவர்கள் வந்தவர்கள்.
ஆள்தூக்கி சட்டங்களையும், விசாரணை அமைப்புகளையும் ஏவி அரசுக்கு எதிராக பேசுபவர்களை சிறையில் அடைக்கின்றனர். பாஜக-வை எதிர்ப்பவர்களுக்கு தேசவிரோதி பட்டம் கொடுத்து எந்தவித குற்றச்சாட்டுமின்றி பல மாதங்கள் சிறையில் வைக்கின்றனர்.சீதாராம் யெச்சூரி
நாட்டின் பொதுச் சொத்துகளை பாஜக சூறையாடி வருகிறது. இயற்கை வளங்களையும், கனிமங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்கின்றனர்.
தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டியும், விசாரணை அமைப்புகளை ஏவியும், வழக்கு பதிவுசெய்தும் நிறுவனங்களிடமிருந்து முறைகேடாக நிதி பெற்று தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் மிகப்பெரும் நிதி ஊழலை செய்து இருக்கிறது பாஜக.
நஷ்டம் ஏற்பட்ட நிறுவனங்களிடமிருந்தும்கூட நிதியை பெற்றிருக்கிறார்கள். இது வெளிநாட்டு பணம் எனச் சந்தேகம் வருகிறது. இது போதைப்பொருள் கடத்தல் மூலம் வந்த பணமாக கூட இருக்கலாம். எனவே விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது குறித்தெல்லாம் அமலாக்கத்துறை விசாரணை செய்யாமல், எதிர்க்கட்சி தலைவர்களை சிறை வைப்பதிலேயே மும்முரமாக உள்ளது.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர திட்டம். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையிலெடுத்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் எனச் சொல்லிவிட்டு பல கோடி ரூபாயை முறைகேடாகப் பெற்ற பாஜக, ஊழலை ஒழிக்கும் லட்சணம் இதுதானா?
இந்தியாவை ஒரே அரசாங்க முறையாக மாற்ற துடிக்கும் மோடியின் மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கையை தடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளோம். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே இட ஒதுக்கீடு முறையை சிறப்பாக செயல்படுத்த முடியும். மனுவாத அடிப்படையிலான கட்டமைப்பை பாதுகாக்க பாஜக விரும்புகிறது. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று மறுக்கிறார்கள்.
மோடி நான் கியாராண்டி என சொல்லுகிறார். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தீர்களா? அப்புறம் என்ன கியாரண்டி?
அசைவ உணவு சாப்பிடக் கூடாது எனவும், யார் இந்து, முஸ்லிம் என பேசுகிறார் மோடி. இதுதான் ஒரு பிரதமரின் வேலையா? 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் மோடி, மீண்டும் மீண்டும் 9 முறை எதற்காக தமிழகத்திற்கு வருகிறீர்கள்? வட இந்தியாவில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதால், தென் மாநிலத்திற்கு படையெடுக்கிறார்கள்.
ஒருவேளை இ.வி.எம் மூலம் மோசடி செய்ய உள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கன்ட்ரோல் யூனிட்டில் இருந்து வி.வி பேடுக்கு என்ன செல்கிறது என்பது தெரியவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது
பாஜக-வுக்கும், மோடிக்கும் தென் மாநிலங்கள் எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை. இந்த நிலையில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசும் பாஜக மீது எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. கடந்தமுறை போல தமிழகம் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது. வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு முன்னோடியான மகத்தான தீர்ப்பாக இருக்கும்" எனப் பேசினார்."அதிமுக அழிந்துவிடும் என்று சொல்லும் அண்ணாமலை என்ன, விஸ்வாமித்திரரா?" - செல்லூர் ராஜூ கேள்வி
http://dlvr.it/T5V6tZ
Sunday 14 April 2024
Home »
» ``தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் மிகப்பெரும் ஊழலைச் செய்திருக்கிறது பாஜக!" - சீதாராம் யெச்சூரி