இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றுவிட்டார். மத்திய அமைச்சர்களும் ஒருவர் மாறி மற்றொருவர் என தமிழ்நாடு வந்து செல்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று தமிழகம் வருகிறார், இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி, கோவையில் இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.ஸ்டாலின், ராகுல் காந்தி
இன்று மாலை 3 மணிக்கு திருநெல்வேலி பெல் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார், பின்னர், அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவை செட்டிபாளையம் எல். அண்டு டி பைபாஸ் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வரும் 15-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தமிழகம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5PKyS
Friday 12 April 2024
Home »
» Tamil News Live Today: இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம்!