புதுடில்லி: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சமூக வலைதளமான, 'டுவிட்டர்' முயற்சியை தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்களின் குறைகளை தீர்க்க, 'டுவிட்டர் சேவா' துவங்கப்பட்டு உள்ளது.
தீவிர கவனம் :
பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 64, வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி வருபவர். டுவிட்டர் மூலம் சாதாரண மக்கள் உதவி கேட்டால் கூட, விரைவாக செய்து தருபவர்.
'டுவிட்டர் சேவா' :
அவரது டுவிட்டர் முயற்சி, பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்களின் உதவிக்காக, வெளியுறவு அமைச்சகம், 'டுவிட்டர் சேவா' என்றடுவிட்டர் பக்கத்தை துவங்கியுள்ளது; இதை, வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங் துவக்கி வைத்தார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பகுதி துாதரகங்களை அணுகவும், பாஸ்போர்ட் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கவும், இந்த டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தலாம். தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் இருந்தபடியே, இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் கிளை அலுவலகங்களை டுவிட்டர் பக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
New Delhi : External Affairs Minister Sushma Swaraj of the social web site, 'Twitter' attempts to resolve the grievances of NRIs, "tweeted Seva 'is launched.