சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கடந்த 9 நாட்களாக கூவத்தூரில் உள்ள 'கோல்டன் பே' என்ற சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணியளவில் முதல்வராக பதவியேற்க உள்ளனர். இதனையடுத்து ரிசார்ட்டில் தங்கியிருந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அங்கிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். எனினும், ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள் அங்கிருந்து கிளம்பவில்லை. அவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
English summary:
Chennai: AIADMK MLAs in the last 9 days kuvattur 'Golden Bay' were placed in a luxury hotel. They were not allowed to go out. In this case, the group leader of the AIADMK legislature elected Edappadi Palanichany 4 pm today at the inauguration of the chief minister.





