சென்னை:சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மாபா. பாண்டியராஜன் கூறியதாவது: அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு சட்டப்படி செல்லாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும். தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ்., பின்னால் நிற்பார்கள். சசிகலாவுக்கு எதிராக மைத்ரேயன் மனு அளித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். தொண்டர்கள் ஓ.பி.எஸ்., பக்கம் உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.செம்மலை கூறியதாவது:
குடும்ப ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில்எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். அவர்கள் தொகுதிக்கு வர வேண்டும். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளார்கள். மக்களின் மனநிலை அறிந்து நான் இடம் மாறினேன். நீதிப்பயணத்தை ஓ.பி.எஸ்., துவங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னையன் கூறியதாவது:
எங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது. ஜெயலலிதா வழங்கிய பதவியில் நாங்கள் சட்டப்படி உள்ளோம். 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லாதவரை கட்சியில் சேர்க்க சசிகலாவுக்கு அதிகாரமில்லை. தினகரன் நியமனம் சட்டப்படி செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.





