முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக கர்நாடகா வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கிருக்கும் ஶ்ரீ முருகராஜேந்திர மடத்துக்குச் சென்று மடாதிபதிகளிடம் ஆசிபெற்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இந்துத்துவத்தைக் கடுமையாக விமர்சித்துவரும் ராகுல் காந்தி, தேர்தல் பலனுக்காகவே மடத்துக்குச் சென்று வந்திருக்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.ராகுல் காந்தி``நரேந்திர மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை..!" - சீறிய ராகுல் காந்தி
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராகக் களம் காண்பதற்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி மோதலாக வெடித்து, இரு தரப்பு கோஷ்டிப்பூசலாக மாறியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவும், சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காகவும் ராகுல் காந்தி நேற்று முன்தினம் (03.08.2022) கர்நாடகா மாநிலத்துக்கு வந்தார்.
விழாவில் பங்கேற்ற பிறகு, தார்வாடில் நடைபெற்ற முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்ற வேண்டும். தனிப்பெரும்பான்மையுடன் நாம் ஆட்சியமைக்க வேண்டும். மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் சேர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பா.ஜ.க அரசின் ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நமது உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பேசக் கூடாது. நமக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். முதல்வர் வேட்பாளர் பதவி யாருக்கு என்பது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல், அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்" என வலியுறுத்திப் பேசினார்.``பாஜக நாட்டை அழிக்கிறது; அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது" - சித்தராமையா காட்டம்மடாதிபதியுடன் ராகுல் காந்தி
கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்புவதற்குத் தயாராக இருந்த ராகுல் காந்தி, யாரும் எதிர்பாராதவிதத்தில் சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள, லிங்காயத் சமூகத்தவர்களுக்குச் சொந்தமான ஶ்ரீ ஜகத்குரு முருகராஜேந்திர மடத்துக்கு (Sri Jagadguru Murugharajendra Vidyapeetha) பயணம் மேற்கொண்டார். அங்கு வழிபாடு நடத்தியவர், அங்கிருந்த மடத்தின் தலைமை மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு ஷரணரு, ஹாவேரி ஹொசமட சுவாமி உள்ளிட்டோரைச் சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி, `தான் மடத்துக்கு வந்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும், குரு பசவண்ணாவின் கொள்கைகளைப் படித்து பின்பற்றிவருவதாகவும், இஷ்டலிங்க தீட்சை, சிவயோகப் பயிற்சி குறித்து தான் கற்க ஆசைப்படுவதாகவும்' தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.மடத்தில் ராகுல்காந்தி `நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
அதையடுத்து மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு ஷரணரு, ராகுல் காந்திக்கு திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார். அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, ``இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்" எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார். அப்போது, தலைமை மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு ஷரணரு குறுக்கிட்டு,``தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல!" என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தி மடத்துக்குச் சென்று, துறவிகளிடம் ஆசிபெற்ற சம்பவம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. மேலும், துறவியின் ஆசீர்வாத கருத்து சர்ச்சையை ஏற்படுத்தவும், தலைமை மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு ஷரணரு, ``மடத்துக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது வழக்கமான ஒன்றுதான்" எனக் கூறி விளக்கமளித்திருக்கிறார். மடாதிபதியுடன் ராகுல் காந்தி
தேர்தல் வாக்குக்காகத்தான் ராகுல் காந்தி மடத்துக்குச் சென்றாரா?
ராகுல் காந்தி சென்ற சித்ரதுர்காவின் ஶ்ரீ ஜகத்குரு முருகராஜேந்திர மடம் லிங்காயத் சமூகத்தவர்களின் பிரதான வழிபாட்டுத்தலம். கர்நாடகாவில் மட்டும் சுமார் 17 சதவிகிதம் பேர் லிங்காயத் சமூகத்தவர்கள் இருக்கின்றனர். இவர்களின் நீண்டகால கோரிக்கையான லிங்காயத்துக்கு தனிமத அந்தஸ்து என்ற அங்கீகாரத்தை, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம்தான் அளித்தது என்றாலும்கூட பெரும்பாலானவர்கள் பா.ஜ.க-வை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணம், கர்நாடகாவில் பா.ஜ.க-வை வளர்த்தெடுத்து, மூன்று முறை பா.ஜ.க முதல்வராகப் பதவியில் இருந்த பி.எஸ்.எடியூரப்பா. அவரும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மையும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.கர்நாடகா: ``காங்கிரஸ் ஏன் 50% மக்களைப் புறக்கணிக்கிறது?" -சொந்தக் கட்சியையே சாடிய காங்கிரஸ் செயலாளர் கர்நாடகா சட்டமன்றம்
இந்தச் சூழ்நிலையில், அடுத்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தலில் முக்கிய ஓட்டுவங்கியாக இருக்கும் லிங்காயத் சமூகத்தினரை பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே குறிவைத்துள்ளன. அந்த நோக்கத்துக்காகத்தான் ராகுல் காந்தி லிங்காயத் மடத்துக்குச் சென்று ஆசிபெற்று வந்திருப்பதாக மற்ற கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. ராகுலின் இந்தப் பயணம் `கை’ கொடுக்குமா என்பதைத் தேர்தல் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
http://dlvr.it/SWCGBS
Sunday 7 August 2022
Home »
» கர்நாடக மடத்தில் ராகுல் காந்தி... காங்கிரஸுக்கு `கை’கொடுக்குமா `லிங்காயத்’ கணக்கு?!