மனிதர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்த பிரியாவிடை நிகழ்ச்சி, முதன்முறையாக மரத்துக்கு நிகழ்த்தி அசத்தியிருக்கின்றனர் கேரள மாநிலம், திருவனந்தவுரம் அடுத்த செம்பகமங்கலம் கிராம மக்கள்.
சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் தொன்னக்கல் அருகே உள்ள செம்பகமங்கலம் பகுதியில் 200 ஆண்டுகளாக உள்ள பெரிய மரத்தை வெட்ட முடிவு செய்தது நெடுஞ்சாலைத்துறை. இதை அறிந்த செம்பகமங்கலம் மக்கள் தங்கள் பகுதியில் 200 ஆண்டுகாலமாக மக்கள் நிற்பதற்கு நிழலையும், ஏராளமான பழங்களையும் கொடுத்து வந்த மரத்திற்கு ஊர்கூடி பிரியாவிடை நடத்த முடிவு செய்தனர். இந்த நிகழ்வு நடந்த பகுதி மலையாள கவிஞர் குமாரன் ஆசான் அவருடைய சொந்த ஊர் என்பதும் அங்கு அவருக்கு நினைவிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மரம்செம்மரம், செர்ரி, அத்தி, பலா... `இப்படியொரு மரம் வளர்ப்புப் பண்ணையை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!'
செம்பகமங்கலம் பகுதி மக்கள் இந்த பெரிய மரத்துக்கு கொடுக்கப்படும் பிரியாவிடை நிகழ்ச்சி மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக இருக்க வேண்டுமென்று எண்ணி மரத்தை கழுவி, மலர்களாலும், தீபங்களாலும் மரத்தை அலங்கரித்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். மக்கள் அனைவரும் அந்த மரத்தை சுற்றி கூடி நின்று, கவிதைகள் வாசித்து, விளக்குகள் ஏற்றி, அந்த மரத்தை பற்றிய பல தலைமுறை நினைவுகள் கொண்ட சுவாரஸ்யமான கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டனர்.
மரத்திற்கு பிரியாவிடை கொடுத்தது குறித்து பேசிய செம்பகமங்கலம் பகுதிவாசி "எங்கள் ஊரில் இந்த மரத்தின் நிழலின் அருமையை உணராதவரும், இந்த மரத்தின் பழங்களை ருசிக்காதவரும் யாரும் இருக்க முடியாது. இந்த மரம் இனி எங்கள் பகுதியில் இருக்காது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. இந்த மரம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெட்ட ஒப்பந்தக்காரர்களால் திட்டமிடப்பட்டது. ஆனால் நாங்கள் மரத்திற்கு பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். நெடுங்காலமாக இந்த மரம் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. எனவே கடைசியாக அதன் நிழலை அனுபவிக்க விரும்பினோம்'' என்றார்.
இந்த மாமரத்தின் அருகில் உள்ள சும்மாடுத்தாங்கி, நூற்றாண்டு காலமாக அந்த மரத்தின் அருகில் இருந்து வருகிறது. தலைச்சுமை தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் இடமாக அது இருந்து வருகிறது. இந்த சுமைதாங்கியை மட்டும் அருகில் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மரம்'மரம் நட்டால், பணம் பரிசு!' வறட்சியில் சிக்கிய கிராமம்.... வளமாக்கும் மனிதர்!
இந்த மரம் வெட்டப்படுவதற்கு முன் மரத்திற்கு மக்கள் தந்த பிரியாவிடை நெகிழ்சியை ஏற்படுத்தி இருந்தாலும் , ஒரு மரம் வெட்டப்படுவதால் அதை வாழ்விடமாக கொண்ட பறவை இனங்கள் பெரும் பாதிப்பை அடைகின்றன. புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பெரும்பாலான பறவைகளுக்கு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பருவமழைக்காலம் என்பதால், இது போன்ற நேரத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய பறவைகள் பறந்து தப்பித்து விடுகின்றன. சிறிய குஞ்சுகள் மற்றும் முட்டைகள் கீழே விழுந்து அழிந்து போகின்றன. இது பறவைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். வளர்ச்சிப்பணிகள் முக்கியம் என்றாலும் இயற்கை வளங்கள் மற்றும் பறவை, விலங்கினங்களை பாதிக்காமல் பணிகளை மேற்கொள்வது நல்லது.
http://dlvr.it/SWWdnY
Friday 12 August 2022
Home »
» சாலைக்காக வெட்டப்படும்
200 வயது மரம்; ஊர்கூடி பிரியாவிடை கொடுத்த
கேரள மக்கள்!