பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகைக்கு நிர்வாணமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அவை பெண்களின் உணர்வுகளை புன்படுத்துவதாக இருப்பதாக கூறி மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்கிற்கு எதிராக புகார் செய்தது. அதோடு மகாராஷ்டிரா பெண்கள் கமிஷனிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது. தொண்டு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் ஆசிஷ் ராய் கொடுத்துள்ள புகாரில், ``ரன்வீர் சிங் பத்திரிகைக்கு கொடுத்த நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி இருக்கிறது. இப்படங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்திற்கு எதிரானது ஆகும்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக ரன்வீர் சிங்கிற்கு சம்மன் கொடுக்க மும்பை போலீஸார் அவரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டில் ரன்வீர் சிங் இல்லை.ரன்வீர் சிங்
அவர் படப்பிடிப்புக்காக வெளியில் சென்று இருப்பதாகவும், 16-ம் தேதிதான் வருவார் என்றும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்மனை கொடுத்துவிட்டு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்துவிட்டு வந்தனர். ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பதற்கு பாலிவுட்டில் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் ரன்வீர் சிங்கிற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் பொது மக்களிடம் ஆடைகளை நன்கொடையாக பெற்று அனுப்பி வைத்தது. நடிகை தீபிகா படுகோனேயின் கணவரான ரன்வீர் சிங் தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் நிர்வாண போஸ் கொடுக்கவேண்டும் என்று மற்றொரு தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
http://dlvr.it/SWYMmD
Saturday, 13 August 2022
Home »
» நிர்வாண போட்டோ விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங்-க்கு மும்பை போலீஸார் சம்மன்!
நிர்வாண போட்டோ விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங்-க்கு மும்பை போலீஸார் சம்மன்!
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!