குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், இன்று காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவராக புதிதாக பொறுப்பேற்ற திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்துக் கூறுகிறார்.
மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி கூறுகிறார்.
மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மனு அளிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின், இன்று இரவே சென்னை திரும்புகிறார்.
http://dlvr.it/SWmCsv
Wednesday 17 August 2022
Home »
» டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-பிரதமரை மாலை சந்திக்கிறார்