75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு `ஹர்கர் திரங்கா' என்ற பெயரில் அனைவரின் வீடுகளிலும் மூவர்ணக்கொடியை ஏற்றுவோம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மூவர்ணக்கொடிகளை விநியோகித்ததற்காக பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஒரு குடும்பத்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ப நபர் ஒருவர் சசி-அருண் தம்பதியின் வீட்டுக்கு வெளியே கொலை மிரட்டல் கடிதத்தை ஒட்டியதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். போலீஸ்
பிஜ்னோரின் கிராத்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட புத்தபரா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. மிரட்டலுக்குப் பின்னாலுள்ள நபர்களை அடையாளம்காண விசாரணையைத் தொடங்கியிருப்பதாக பிஜ்னூர் போலீஸார் தெரிவித்தனர். அந்த அடையாளம் தெரியாத நபர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.``இந்திய தேசியக் கொடி, பிற நாட்டவருக்கும் பாதுகாப்புக் கவசம்" - மோடி சொன்ன உதாரணம்
http://dlvr.it/SWjXMX
Tuesday 16 August 2022
Home »
» மூவர்ணக்கொடிகளை விநியோகித்த குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல்! - மர்ம நபரைத் தேடும் போலீஸ்