கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.ஏ-வுமான பிரியங்க் கார்கே, பா.ஜ.க தலைமையிலான மாநில அரசு, அரசு வேலைகளை விற்க முடிவு செய்திருக்கிறது என குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "பல்வேறு அரசு பதவிகளில் ஆள் சேர்ப்பதில் பா.ஜ.க பெரிய அளவில் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். அரசு பதவிகளை பா.ஜ.க விற்க முடிவு செய்திருக்கிறது.
இளம் பெண்களுக்கு அரசு வேலை வேண்டுமானால், எந்த அரசியல்வாதியுடனாவது இரவு தங்க வேண்டும். ஆண்களாக இருந்தால் அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒரு அமைச்சர் ஒருஇளம் பெண்ணை அரசு வேலைக்காக தன்னுடன் இரவு தங்க கூறியதும், அவரின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவுடன் அவர் ராஜினாமா செய்ததும், எனது வார்த்தைகளுக்குச் சான்றாகும். பிரியங்க் கார்கே
ஒவ்வொரு அரசு வேலைத் தேர்விலும் முறைகேடுகள் நடந்தால் ஏழை, திறமையான மாணவர்கள் எங்கே போவது?, எந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்தாலும் தங்களுக்கு எதுவும் ஆகாது என்பது குற்றவாளிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் தெரியும். இதனால், அரசு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிற சுமார் 3 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்துடன் அரசு விளையாடுகிறது.
மேலும், பா.ஜ.க. தேசபக்தியை வணிகத்திற்காகப் பயன்படுத்துகிறது. பாலிஸ்டர் (polyester) கொடிகளைப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் வகையில் கொடி குறியீடு திருத்தப்பட்டுள்ளது. இதன் மிகப்பெரிய பயனாளி ரிலையன்ஸ் நிறுவனம்தான். அதே போல, ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்திலிருந்து பணம் பிடித்தம் செய்து, அவர்களுக்குக் கொடி கட்டாயம் வழங்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.பாஜக - காங்கிரஸ்
இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பா.ஜ.க, "முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே இது போன்ற கருத்துகளை வெளியிடுவதற்கு முன் தனது சொந்த வீட்டின் அழுக்கைக் கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜெயமாலா லஞ்ச ஊழல் அம்பலமானது, அதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதே போல, நாட்டின் பல பெண்கள் கடினமாக உழைத்து, படித்து, தேர்வில் தங்களால் இயன்றதைக் கொடுத்து அதில் தேர்ச்சி பெற்று வேலை பெறுகின்றனர். பிரியங்க் கார்கே கூறிய கருத்து அனைத்து பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளது, அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று பா.ஜ.க மறுப்பு தெரிவித்திருக்கிறது.``நம்முடைய பிரதமர் மோடி, நேருவுக்கு நேர் எதிரானவர்..!" - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
http://dlvr.it/SWZNFS
Saturday 13 August 2022
Home »
» கர்நாடகா: `அனைத்து பெண்களையும் அவமதிக்கும் பேச்சு’ - காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்