மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அம்மன் கோயிலில் திருடன் ஒருவன் விசித்திரமான முறையில் திருட்டில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது... அப்படி என்ன செய்தார் என்று பார்த்தால் .... மற்ற திருடர்களைப் போலவே இந்த திருடனும் கோயிலில் காணிக்கை பெட்டிகளைத் திருட வந்திருப்பது அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அவர் திருடுவதற்கு முன்பு அம்மனைக் கும்பிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது, வீடியோவில், திருடன் அம்மன் சிலையின் முன்பு கைகளைக் கூப்பி வணங்குவதைக் காணலாம்.அம்மன் கோயில்
மேலும் கோயிலுக்கு திருட வந்த நபர் நன்கொடைப் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்கிறார். இதுமட்டுமல்லாமல், நன்கொடைப் பெட்டிகளைத் தவிர, கோயிலில் இருந்த 2 பெரிய மணிகள் மற்றும் கோயில் சொத்துகள், அம்மனுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட சில விலையுயர்ந்த பொருள்களையும் திருடன் திருடிச் சென்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
A pious thief in village of Jabalpur, first worshiped Goddess Lakshmi in the temple, then stole 3 donation boxes from the temple.
pic.twitter.com/Y1ePmEmRrV— Crime Reports India (@AsianDigest) August 8, 2022
``ராகுலும் போலி, அவருடைய சித்தாந்தமும் போலி..!" - மத்திய அமைச்சர் தாக்கு
http://dlvr.it/SWMG7n
Wednesday 10 August 2022
Home »
» சாமியை கும்பிட்டு... கோயிலில் இருந்த நன்கொடை பெட்டியை திருடிச் சென்ற திருடன்! | Video