"தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எங்களுக்கு மனிதநேயத்துடன் காலமுறை சம்பளம் வழங்குங்கள்..." என்று தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த பகுதி நேர ஆசிரியர்கள், தற்போது, ``பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.எஸ். செந்தில்குமார்
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில், `10,000 ரூபாய் சம்பளத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தவிக்கிறோம்.
பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாகப் பணிபுரிகின்றனர். இந்த 12 ஆண்டுகளில் ஒருமுறைக்கூட எங்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவில்லை.போனஸ்
மே மாதத்தில் ஒருமுறைக்கூட சம்பளமும் வழங்கவில்லை. ரூ 2,500 சம்பள உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து 3 மாதங்களாகியும், இதுவரை வழங்கவில்லை.
ரூ.10,000 தொகுப்பூதியத்தோடு கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன் பாட பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேர், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.பள்ளிக் கல்வித்துறை
மனிதாபிமான அடிப்படையில் தமிழக முதல்வர் அவர்கள், தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். `8 வருடங்கள் முடிந்துவிட்டன.. கருணை காட்டுங்கள்!’ -பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர ஆசிரியர்கள்
http://dlvr.it/T18H0w
Tuesday, 9 January 2024
Home »
» `ரூ.10,000 சம்பளத்தை வைத்துக்கொண்டு, அல்லாடுகிறோம்..!' - பொங்கல் போனஸ் கோரும் பகுதி நேர ஆசிரியர்கள்