போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!
வேலை நிறுத்தம்
போக்குவரத்துக் கழக ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். `பண்டிகை காலத்தில் நடத்தப்படும் போராட்டம் முறையற்றது' என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கின்றன. வரும் 19-ம் தேதி தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு... தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!
விபத்து
சென்னையிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத்தில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டிருக்கிறது. சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது, ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வேயின் சி.பி.ஆர்.ஓ ராகேஷ் வெளியிட்ட தகவலின்படி, இன்று காலை 9.15 மணியளவில் விபத்து ஏற்பட்டிருப்பதாவும், இந்த சம்பவத்தின்போது, ரயிலின் கதவுகளுக்கு அருகில் நின்றிருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தற்போது ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்தாண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார்.
http://dlvr.it/T1Bnh1
Wednesday 10 January 2024
Home »
» Tamil News Live Today: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!