உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் குறித்து, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில், தரவரிசை வெளியிடப்பட்டிருக்கிறது. ஹென்ஸி பாஸ்போர்ட் குறியீட்டின் அடிப்படையில்... அதாவது, விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் `சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள்' எனக் கருதப்படுகிறது. இந்த தரவரிசைப் பட்டியலில், 194 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.இந்தியா - மோடி
அதன்படி ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழைய முடியும். அதனால், கடந்த ஐந்தாண்டுகளாக இந்த இரண்டு நாடுகளும் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பின்லாந்து, ஸ்வீடன், தென் கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பவர்களால், 193 நாடுகளில் விசா இல்லாமல் நுழையமுடியும் என்பதால், அந்த நாடுகள் இரண்டாவது இடத்திலும், 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க தகுதிவாய்ந்தவையாகக் கருதப்படும் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த தரவரிசையில் இந்தியா 80-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம், 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். அதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பிரபல சுற்றுலா நாடுகளும் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த தரவரிசையில் 101-வது இடத்தில் இருக்கிறது.``இந்தியா கூட்டணி மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது..!" - திருச்சூரில் பிரதமர் மோடி
http://dlvr.it/T1FJfF
Thursday 11 January 2024
Home »
» Passport: பவர்ஃபுல் பாஸ்போர்ட்ஸ்; முதலிடத்தில் சிங்கப்பூர்... லிஸ்ட்டில் இந்தியாவின் நிலை என்ன?!