உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பூஜைகள் 16-ம் தேதி தொடங்குகின்றன.
1990-களில் அயோத்தி ராமர் கோயிலை முன்வைத்தே பா.ஜ.க தேர்தல் பிரசாரங்களை நடத்தியது. பா.ஜ.க-வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில் விவகாரம் பா.ஜ.க-வின் அரசியல் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாகவே இருந்தது.பிரதமர் மோடி
ராம் மந்திர் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "ராமர் கோயிலின் கருவறை தயாராக இருக்கிறது. குழந்தை ராமர் சிலையும் தயாராக இருக்கிறது. ஆனால் கோயில் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுமானப் பணிகள் முடியவில்லை. இந்த முழுப்பணியும் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இன்னும் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. எனவே, ஏராளமான மக்கள் இன்னும் கட்டுமானப் பணி முழுமைப்பெறாத கோயிலுக்கு வந்தால் நகரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும்" எனத் தெரிவித்திருந்ததும், அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதற்கிடையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.ராமர் கோயில் - சம்பத் ராய்
கர்நாடக முதல்வர் சித்தராமையா, ``நான் ஓர் இந்து, ஆனால் மதவாதத்தையும் இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன். எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை... ஆனால் இந்துத்துவா கொலை மற்றும் மக்களிடம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது. ராமர் கோயில் கட்டுவதை எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத்தான் எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம்" எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் நம்பிக்கை இல்லை. ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினரையும் இணைக்கக்கூடிய பண்டிகைகள்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பதில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ராமர் கோயில் திறப்பு விழாவை பா.ஜ.க நடத்துகிறது. ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க வித்தைக் காட்டி வருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.சித்தராமையா - மம்தா பானர்ஜி
அதைத் தொடர்ந்தே ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் தனது முடிவைத் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், ``2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கோயில் விவகாரத்தில் எந்தக் கருத்தையும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கவில்லை.
இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலுக்கு, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களால் திறப்பு விழா நடத்தப்படுகிறது. இது அப்பட்டமாக தேர்தல் ஆதாயத்திற்காக கொண்டாடப்படுகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்-ஸின் நீண்டகால திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்துகிறது. அதனால், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் அழைப்பை ஏற்க மறுத்திருக்கிறார்கள். மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க அயோத்தியில் ராமர் கோயில் என்பதை நீண்டகால அரசியலாக செய்து வருகின்றன" எனப் பதிவிட்டிருக்கிறார்.அயோத்தி ராமர் கோயில்: ரூ.25 லட்சத்தில் மணி; 100 கிலோ தங்கத்தில் 42 கதவுகள்!
http://dlvr.it/T1CBqs
Wednesday 10 January 2024
Home »
» அயோத்தி கோயில்: `மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம், அதனால்..' - விழா குறித்த காங்கிரஸின் முடிவென்ன?