பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் பதவி வகித்து வருகிறார். அவருக்குக் கீழ் பிரான்ஸ் வரலாற்றின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற எலிசபெத் போர்ன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் கொண்டுவரப்பட்ட இமிகிரேஷன் சட்டம், பெரும்பான்மை மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.கேப்ரியல் அட்டல்
அதைத் தொடர்ந்து, பிரதமர் எலிசபெத் போர்னுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. இதற்கிடையில் நடந்த இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த இமானுவேல் மேக்ரான் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் இழந்தது. அதனால், இந்த கொந்தளிப்பான சூழலைக் கையாள்வதற்கு இமானுவேல் மேக்ரான் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரவும் திட்டமிட்டார். அந்தத் திட்டமும் பெரியளவில் கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான், பிரதமர் எலிசபெத் போர்ன் தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அடுத்த பிரதமராக யாரைத் தேர்வு செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போது இருக்கும் இந்தக் கொந்தளிப்பான சூழலைக் கட்டுப்படுத்தாவிட்டால், இரண்டாவது முறை அதிபராகத் தொடரும் இமானுவேல் மேக்ரான், தேர்தலைச் சந்திக்கக்கூட முடியாத சூழல் ஏற்படும்.கேப்ரியல் அட்டல்
அதனால், 34 வயதேயான கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல், அந்த நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் வரலாற்றில் 34 வயது இளம் பிரதமர் என்ற அந்தஸ்தை கேப்ரியல் அட்டல் பெற்றிருக்கிறார்.
யார் இந்த கேப்ரியல் அட்டல்?
கேப்ரியல் அட்டல், கொரோனா நோய்த்தொற்று பரவலின்போது பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அதிபர் இமானுவேல் மேக்ரானின் நெருங்கிய நண்பரான அவர், நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. மேலும், அறிவார்ந்த அமைச்சர்களில் ஒருவர் எனவும் பாராட்டப்பட்டவர். இவர் தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்.கேப்ரியல் அட்டல் - மேக்ரான்
இமானுவேல் மேக்ரான் 2022-ல் தனது பெரும்பான்மையை இழந்தபோது, கேப்ரியல் அட்டலுடன் அவர் இணைந்துப் பணியாற்றினால், பிரான்ஸுக்கு புதிய வழியைக் காண்பிக்க முடியும் என அவரது கட்சிக்காரர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இமானுவேல் மேக்ரான் அவரையே பிரதமராக நியமித்து, அரசமைக்க தேர்வு செய்திருக்கிறார்.ரஃபேல் விமானம், நீர்மூழ்கிக் கப்பல் வாங்க புது ஒப்பந்தம்... மோடியின் பிரான்ஸ் பயணமும் பின்னணியும்!
http://dlvr.it/T18gq7
Tuesday 9 January 2024
Home »
» France: இளம் வயது பிரதமர்; தன்பாலின ஈர்ப்பாளர்... யார் இந்த கேப்ரியல் அட்டல்?!