மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதீப் என்பவர், கடந்த 2006-ம் ஆண்டு மெளமிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான நாளில் இருந்து மெளமிதா தனது கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுதீப் தனக்கு தனது மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்கவேண்டுமென்று கோரி போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் சுதீப் மேல்முறையீடு செய்தார். அம்மனுவில், ''மெளமிதாவுடன் 2006-ம் ஆண்டு ஜூலை 12-ம் திருமணம் நடந்தது. ஆனால் தனக்கு வேறு ஒரு காதலன் இருப்பதாகவும், தன்னை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டதாக கூறி தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு வரவே இல்லை. 2013-ம் ஆண்டு என் மீதும் எனது பெற்றோர் மீது நாங்கள் அவரை சித்ரவதை செய்வதாகவும், வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்துவதாகவும் கூறி போலீஸில் பொய்யான ஒரு புகாரை கொடுத்துள்ளார். அதோடு அவரை நானும் எனது பெற்றோரும் சேர்ந்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும், சேலையில் தீவைக்க முயன்றதாகவும் புகாரில் பொய்யான ஒரு தகவலை தெரிவித்துள்ளார். எனது பெற்றோர் இப்புகாரில் 23 நாட்கள் சிறையில் இருந்துள்ளனர்.
அதோடு எனது பெற்றோரிடம் 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு செட்டில்மென்ட் ஆவணங்களில் கையெழுத்தும் போட்டுக்கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் வேறு ஒரு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷில் நாகு தலைமையிலான அமர்வு, ''திருமண உறவை அனுபவிக்காமல் இருப்பது மற்றும் கணவனுடன் மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுப்பது மனரீதியில் கொடுமையானது. புகாரின்தாரரின் குற்றச்சாட்டை மறுக்க சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது அவர் தரப்பிலோ யாரும் ஆஜராகவில்லை'' என்று கூறி சுதீப்பிற்கு விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T1KxjZ
Saturday, 13 January 2024
Home »
» `தாம்பத்திய உறவுகொள்ள மறுப்பது மனரீதியில் கொடுமையானது..!’ - கணவருக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்