No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Sunday, 5 February 2017

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிய ரயில் வழித்தடங்களை அமைக்க, மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முக்கிய நகரங்களிடையே, புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, இந்த ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யாமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்தது.இதில், ரயில்வே துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மாதம் முதல் தேதியில் தாக்கலான பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

அதன் விபரம்:

* ரயில் துறை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும், ரயில் பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பிற்காகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில், 1.31 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 8.2 சதவீதம் அதிகம் * தெற்கு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், தமிழகத்தின், 10 முக்கிய ரயில் திட்டங்களுக்காக, அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது* அதன்படி, 2017 - 18ல், புதிய பாதைகளில் ரயில் வழித் தடங்களை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்* கரூர் - சேலம் இடையிலான ரயில்வே வழித்தடப் பணிகளுக்காக, 5.25 கோடி ரூபாய் * திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை இடையே, ரயில்வே வழித்தடப் பணிகளுக்காக, 190 கோடி ரூபாய்* திண்டிவனம் - நகரி இடையிலான, 179 கி.மீ., துார ரயில்வே வழித்தடப் பணிகளை விரைவுபடுத்த, 470 கோடி ரூபாய்* அருப்புக்கோட்டை வழியாக, மதுரை - துாத்துக்குடி இடையிலான, வழித்தடப் பணிகளுக்காக, 100 கோடி ரூபாய்* அத்திப்பட்டு - புதுார் இடையிலான, 88 கி.மீ., துார ரயில்வே வழித்தடப் பணிகளுக்காக, ஐந்து லட்சம் ரூபாய் * ஈரோடு - பழநி இடையிலான வழித்தடப் பணிகளுக்காக, 10 லட்சம் ரூபாய்* ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையிலான, 60 கி.மீ., துார ரயில்வே வழித்தடப் பணிகளுக்காக, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொரப்பூர் - தர்மபுரி இடையிலான, 36 கி.மீ., துார ரயில்வே வழித்தடப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English Summary:

Setting up new rail routes in the state, the federal budget allocated. Thus, a major major cities, the establishment of new routes will start in the near future, as expected. 
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
554857

Contributors

Search This Blog