உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா-வில் tech support and tax refunds என்ற பெயரில் 10 பேர் கொண்ட குழு போலி நிறுவனம் நடத்தியுள்ளனர். இவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, லெபனான், ஹாங்காங் போன்ற நாடுகளில் வசிப்பவர்களைக் குறிவைத்து, அதிநவீன மென்பொருட்களைப் பயன்படுத்தி அவர்களின் கணினிகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தியுள்ளனர். அதன் பின் அவர்களைத் தொடர்புகொண்டு அதைச் சிக்கல்களைச் சரிசெய்வதற்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்து கட்டணம் பெற்றுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் கரண் மோகன் மற்றும் வினோத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மோசடி
இந்த சம்பவம் தொடர்பாகச் சிறப்பு அதிரடிப் படை மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (UP STF) விஷால் விக்ரம் சிங், "இவர்களின் இலக்குகள் அனைத்தும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். 10 பேர் கொண்ட இந்த கும்பலிடமிருந்து 70 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் பல மொபைல் போன்கள், சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளோம். மேலும், மின்னணு சாதனங்களின் தடயவியல் பரிசோதனை இப்போது செய்யப்பட்டுவருகிறது. இதுவரை பெறப்பட்ட வங்கி அறிக்கைகளின் பகுப்பாய்வின்படி, இந்த கும்பல் சுமார் ரூ.170 கோடியை ஏமாற்றியுள்ளது.டிஜிட்டல் மோசடி
இவர்களின் பிற வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல் கிடைத்த பிறகு, அந்தக் கணக்குகளை முடக்கி, குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் துருவ் நரங், மயங்க் கோகியா, அக்ஷய் மாலிக், தீபக் சிங், அஹுஜா பொட்வால், அக்ஷய் சர்மா, ஜெயந்த் சிங், முகுல் ராவத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நொய்டா செக்டர் 58 காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.`அதிகரிக்கும் கட்டுமான நிறுவனங்களின் மோசடி': அதிரடி சோதனையில் 500 கோடி ரூபாய் பறிமுதல்!
http://dlvr.it/SV0BDb
Saturday 16 July 2022
Home »
» போலி கால் சென்டர்; 10 பேர் கைது - வெளிநாட்டினரிடம் ரூ.170 கோடி மோசடி செய்தது எப்படி?