பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் கருவுற்றிருக்கிறார். அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், பாதிக்கப்பட்டவரின் மனம், உடல் நலம், மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, 20 வாரங்களை கடந்த கருவையும் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அச்சிறுமியின் எதிர்காலம் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், 28 வாரங்கள் 3 நாள்கள் கடந்த கருவை கலைக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தமிழக அரசு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து சிறுமியின் கருவை அகற்ற வேண்டும் என்றும் சிறுமிக்கு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- முகேஷ்
http://dlvr.it/SV4KRn
Monday 18 July 2022
Home »
» `இக்குழந்தையின் எதிர்காலமே முக்கியம்’- சிறுமி சுமந்த 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி