மும்பை மாநகராட்சியில் பொறியாளர்களாக இருப்பவர்கள் அமோல் தவில், தத்தாத்ரேய மானே. தற்போது மும்பையில் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் நானாசோக் பகுதியைச் சேர்ந்த துக்காராம் என்பவர் மழைத் தடுப்புக்காக தற்காலிக ஷெட் ஒன்றைக் கட்ட திட்டமிட்டிருந்தார். இதற்கு அவர் மாநகராட்சி அதிகாரிகள் மானே, தவில் ஆகியோரைச் சந்தித்து அனுமதி கேட்டார். உடனே அனுமதி கொடுக்க வேண்டுமானால் ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்குள் பேரம் பேசப்பட்டதில் ரூ.1.9 லட்சம் கொடுப்பது என்று முடிவானது. அந்தப் பணத்தைக் கொடுக்க விரும்பாத துக்காராம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். சித்தரிப்பு படம்
அவர்கள் சொன்னபடி துக்காராம் லஞ்சப் பணத்தை எடுத்துச் சென்று மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பொறியாளர் மானேயிடம் கொடுத்தார். உடனே மறைந்திருந்த அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். அதோடு மானே மூலம் போன் செய்து மற்றொரு பொறியாளர் அமோலிடம் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அலுவலகத்திலிருந்த அமோல் மேஜை டிராயரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மும்பையில் தொடரும் கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!
லஞ்சப் பணத்தை வாங்கி அப்படியே டிராயரில் வைத்திருந்தார். அவற்றைப் பறிமுதல் செய்து அதிகாரிகள் எண்ணிப் பார்த்தபோது ரூ.17.64 லட்சம் அளவுக்கு இருந்தது. இதையடுத்து அமோலும் கைதுசெய்யப்பட்டார். அவர்கள் மேலும் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கின்றனர் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்துவருகின்றன்ர்.
மும்பையில் சட்டவிரோதமாகக் குடிசைகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் அனுமதி கொடுத்து லஞ்சம் வாங்குகின்றனர். குடிசைகள் கட்டி முடிக்கப்பட்ட சில ஆண்டுகளில் அரசு அதை அங்கீகரித்துவிடுகிறது. இதையடுத்து அதை விற்பனை செய்துவிட்டு வேறு இடத்தில் குடிசை அமைக்கச் சென்றுவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது.
http://dlvr.it/STVPT5
Thursday 7 July 2022
Home »
» அலுவலக மேஜை டிராயரில் மட்டும் லஞ்சப் பணம் ரூ.17 லட்சம்... மும்பை மாநகராட்சிப் பொறியாளர்கள் கைது!